Coolie First Review : கூலி படம் பார்த்து அனிருத் சொன்ன பர்ஸ்ட் ரிவ்யூ!

Published : May 04, 2025, 02:02 PM ISTUpdated : May 04, 2025, 02:04 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தை பார்த்த இசையமைப்பாளர் அனிருத், படம் பற்றிய தன்னுடைய முதல் விமர்சனத்தை கூறி உள்ளார்.

PREV
14
Coolie First Review : கூலி படம் பார்த்து அனிருத் சொன்ன பர்ஸ்ட் ரிவ்யூ!

Coolie First Review by Anirudh : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, அமீர்கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதுதவிர நடிகை பூஹா ஹெக்டேவும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார். கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

24
கூலி ரிலீஸ் தேதி

கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக கிரீஷ் கங்காதரன் பணியாற்றி உள்ளார். கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தேவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ந் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

34
கூலி பட அப்டேட்

கூலி திரைப்படம் குறித்த அப்டேட்டும் ஒவ்வொன்றாக வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி இப்படத்தில் இருந்து ரஜினி பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் செய்யப்பட்ட ஜிகிடு ஜிகிடு பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. அப்பாடலை டி.ராஜேந்தர் பாடி இருந்தார். படத்தின் ஹைலைட்டாக அப்பாடல் அமையும் என கூறப்படுகிறது. இப்பாடலுக்கு ரஜினிகாந்த் நடனமாடி இருக்கிறார். இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

44
கூலி பட விமர்சனம் சொன்ன அனிருத்

இந்நிலையில், கூலி படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகளின் போது அப்படத்தை பார்த்த அனிருத், படம் பற்றிய தனது விமர்சனத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளது. அதன்படி, படத்தை கிட்டத்தட்ட முழுமையாகப் பார்த்துவிட்டதாகவும், படம் மிகவும் அருமையாகவும் வித்தியாசமாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இசையமைப்பாளர் அனிருத், படம் வேறொரு ஷேடில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அனிருத்தின் இந்த பாசிடிவ் விமர்சனத்தால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories