கிருஸ்துமஸ் பண்டியைகை முன்னிட்டு வெளியாகும் 'சூர்யா 44' திரைப்படத்தின் அப்டேட்!

First Published | Dec 23, 2024, 6:26 PM IST

நடிகர் சூர்யா நடிக்கும், 44-ஆவது படத்தின் டைட்டில் டீசர் வரும் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Suriya 44 Movie

நடிகர் சூர்யா நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் 'கங்குவா'. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா கடந்த இரண்டு வருடமாக நடித்து வந்த இந்த திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில், யாரும் எதிர்ப்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இப்படத்தின் டிசாஸ்டர் தோல்வி சூர்யாவை அதிக அளவில் பாதித்ததாக கூறப்பட்டது. மேலும் அதன் தாக்கத்திலிருந்து வெளியே வருவதற்காக, அடுத்தடுத்து பல கோவில்களுக்கு சென்று வந்தார் சூர்யா.

Kanguva Movie Failure

ஜோதிகாவும் தன்னுடைய கணவருக்காக வேண்டிக் கொண்டு, பல கோவில்களுக்கு சென்றதாக கூறப்பட்டது. இது குறித்த புகைப்படங்களும் வெளியாகின. மும்பையே கதியென இருந்த நடிகர் சூர்யா, கங்குவா தோல்விக்கு பின்னர் சென்னையில் தான் அதிகம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இயக்குனர் பாலாவின் 25 ஆம் ஆண்டு விழா மற்றும் வணங்கான் படத்தின் ஆடியோ லாஞ்சிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவில் தனக்கு வாழ்க்கையை கொடுத்ததே இயக்குனர் பாலா தான் என உருக்கமாக பேசினார் சூர்யா.

தேசிய விருது யாருக்கு? 2024-ல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய 4 நடிகர்கள்!
 

Tap to resize

Suriya Speech in Bala 25

அதே போல் பாலா இயக்கிய நந்தா திரைப்படம் தான், தனக்கு காக்க காக்க, கஜினி போன்ற ஹிட் படங்கள் கிடைக்க காரணமாக அமைந்தது என கூறினார் . இந்த திரைப்படத்தின் தோல்வியில் இருந்து மீண்டு வர சூர்யாவுக்கு இரண்டு வார காலம் ஆன நிலையில், தற்போது இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் சூர்யா 45 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது சூர்யாவின் 44-ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Suriya 44 Title teaser Release

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா தன்னுடைய 44 வது படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் உள்ளிட்ட பல இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில், சூர்யா மிகவும் இளமையான லுக்கில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யா கேங் ஸ்டாராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயராம், ஜோஜோ ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித், பிரேம்குமார், உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேமியோ ரோலில் ஸ்ரேயா சரண் நடிக்கிறார். மேலும் இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் 2d என்டர்டைன்மெண்ட் நிறுவனங்கள் தயாரிக்கிறது.  இந்த படத்தின் டைட்டில் டீசர் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 25ஆம் தேதி, வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சிரஞ்சீவி பேத்தியா இது? பட்டு பாவாடையில் கியூட்டாக இருக்கும் ராம் சரண் மகள்! முதல் முறையாக வெளியான புகைப்படம்!

Latest Videos

click me!