
தங்கலான்:
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் 'தங்கலான்'. நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், பார்வதி திருவோத்து கதாநாயகியாக நடித்திருந்தார். மாளவிகா மோகனன் இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்த நிலையில், இயக்குனர் ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்திருந்தார். பழங்குடி மக்களை ஆங்கிலேயர்கள் தங்கம் எடுக்க நிர்பந்தித்தது பற்றி தான் இந்த படம் எடுத்து கூறியது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியான போதிலும், இந்த படத்தின் கதைக்களத்தில் இருந்த தொய்வு படத்தின் பாக்ஸ் ஆபிஸை பாதித்தது. பாக்ஸ் ஆபிசில் இந்த படம் தோல்வியை தழுவிய நிலையிலும், இப்படத்தில் நடிகர் நடிகர் விக்ரம் நடிப்பும் 'தங்கலான்' கதாபாத்திரத்திற்காக இவர் போட்ட உழைப்பும் பாராட்டை குவித்தது.எனவே இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளது.
மகாராஜா:
இயக்குனர் நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில், கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் 'மகாராஜா'. நடித்தார் விஜய் சேதுபதி முடி திருத்தும் தொழிலாளியாக நடித்திருந்த இந்த படத்தில், விஜய் சேதுபதி 15 வயது மகளுக்கு அப்பாவாக நடித்திருந்தார். தன்னுடைய மகளை சீரழித்தவர்களை விஜய் சேதுபதி பழிவாங்க போராடுவது தான் இந்த படத்தின் கதைக்களம். குடும்பம், செண்டிமெண்ட், என எதிர்பாராத திருப்புமுனையுடன் வெளியான இந்த படம், வசூல் ரீதியாக மட்டும் இன்றி விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்த 'மகாராஜா' திரைப்படம், சீனாவிலும் 5 கோடிக்கு மேல் தொடர்ந்து வசூல் சாதனை படைத்தது குறிபிடித்தக்கது.
அமரன்:
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், இந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'அமரன்'. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான இந்த படத்தை, உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்திருந்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படத்தில், வழக்கமாக தன்னுடைய நடிப்பு பாணியில் இருந்து விலகி சிவகார்த்திகேயன் புதுமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அமரன் படத்திற்காக சுமார் 2 வருடம் ஒரு ஆர்மி ஆபீஸர்ஸ் மேற்கொள்ளும் பயிற்சிகளை எடுத்து தான் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவர் போட்ட உழைப்பு தான் இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியது. இதுவரை அமரன் திரைப்படம் சுமார் 320 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தேசிய விருது பெற தகுதியான நடிப்பை வெளிப்படுத்தியதாகவே பார்க்கப்பட்டது.
ஆடுஜீவிதம்:
இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் இந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இந்த படத்தில் நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரன் ஹீரோவாக நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டு இந்த திரைப்படத்திற்கான பணிகள் துவங்கியது. துபாய்க்கு வேலைக்கு சென்று, அங்கிருந்து தப்பிக்க போராடிய நஜீம் என்கிற மனிதரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த திரைப்படம் தான். படக்குழுவினரின் சுமார் 6 வருட கடின உழைப்புக்கு பின்னர் இந்த படம் உருவானது. இந்த படத்தில் பிரித்திவிராஜ் உடலை இளைத்து, வெய்யில் பட்டு தோல் சுருங்கி போய் நிஜத்திலும் அதிக கஷ்டங்களை தாங்கி தான் நடித்தார். எனவே இப்படத்திற்காக இவருக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என கூறப்பட்டது. இப்படி நான்கு நடிகர்களின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், நீங்கள் யார் தேசிய விருதுக்கு தகுதியானவர் என்று நினைக்கிறீர்கள் என்பதையும் உங்கள் கருத்துக்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நடந்த தாக்குதல்; குழந்தைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்!