எம்ஜிஆர், நம்பியாருக்காக பீவரிலும் கூட பாட்டு எழுதிய வாலி – அழகு ஒரு ராகம் சூப்பர் ஹிட் பாடலா?

Published : Dec 23, 2024, 04:23 PM IST

Vaali Write a Song For MGR Movie With Fever : எம்ஜிஆர் மற்றும் நம்பியாருக்காக பீவரையும் கூட பொருட்படுத்தாமல் கவிஞர் வாலி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

PREV
14
எம்ஜிஆர், நம்பியாருக்காக பீவரிலும் கூட பாட்டு எழுதிய வாலி – அழகு ஒரு ராகம் சூப்பர் ஹிட் பாடலா?
Vaali Write a Song For MGR Movie With Fever

Vaali Write a Song For MGR Movie With Fever : கவிஞர் வாலி எம்ஜிஆருக்கு ஏராளமான பாடல்களை எழுதி கொடுத்துள்ளார். அதில் எத்தனையோ பாடல்கள் ஹிட் கொடுத்திருக்கிறன. அதுவும் ஏராளமான சூழ்நிலைகளில் இருந்து பாடல்கள் எழுதி அதனை ஹிட் கொடுத்திருக்கிறார். அப்படி ஒரு சூழலில் எழுதிய பாடல் எம்ஜிஆர் நடிப்பில் வந்த படகோட்டி படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதுவும், அந்தப் பாடல் எழுதும் போது அவருக்கு பீவர்.

இயக்குநர் டி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் எம்ஜிஆர், நம்பியார், சரோஜா தேவி, மனோரமா, நாகேஷ், எஸ்வி ராமதாஸ் ஆகியோர் பலர் நடிப்பில் 1964ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் படகோட்டி. இந்தப் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ராம மூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். படகோட்டி படத்தில் 8 பாடல்கள். இதில், 7 பாடல்களுக்கு ஏற்கனவே பாடல் வரிகள் அமைத்து கொடுத்துவிட்டார் வாலி. ஆனால், மேலும், ஒரு பாடலை சேர்க்க விரும்பியுள்ளனர். அந்தப் பாடல் நம்பியாருக்காக எழுத வேண்டும்.

24
Vaali Write a Song For MGR Movie With Fever

யாரை எழுத சொல்வது என்று தீவிர யோசனையில் இருந்த போது கடைசியாக வாலிய வைத்தே 8ஆவது பாடலையும் எழுத சொல்ல திட்டமிட்டார்கள். அதற்காக அவரிடம் போய் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவர் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அதனால், 8ஆவது பாடலை எழுத முடியாது என்று மறுத்திருக்கிறார்.

34
Vaali Write a Song For MGR Movie With Fever, Padagotti Movie

ஒரு பாடலுக்காக வேறொருவரை எழுத சொன்னால் அது உங்களுக்கு நன்றாக இருக்காது. அதனால் நீங்களே எழுதிக் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். பாடலுக்கான காட்சி என்ன என்று விளக்கியிருக்கிறார்கள். சரோஜா தேவியை நினைத்து மது போதையில் ஆசை நாயகியை பார்த்து நம்பியார் பாடும் பாடல் தான் இதற்கான காட்சி.

44
Vaali Write a Song For MGR Movie With Fever

கடைசியாக வாலி அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் என்று பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். படத்தில் இடம் பெற்ற 8 பாடல்களுமே ஹிட். அழகு ஒரு ராகம் என்ற பாடலை பி சுசீலா பாடியிருக்கிறார். கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டிருந்தாலும் கூட வாலி எழுதிக் கொடுத்த அந்த பாடலும் ஹிட் கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories