Kamalhaasan Next Movie Update
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நடிகனாக 2024ம் ஆண்டு ஒரு கசப்பான ஆண்டாக அமைந்தது. ஏனெனில் அவர் சுமார் 6 ஆண்டுகள் கடினமாக உழைத்த இந்தியன் 2 படம் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது. அப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார். அப்படத்தின் தோல்வி ஒரு புறம் இருந்தாலும் சோசியல் மீடியாவில் அது கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது தான் படக்குழுவை பெரியளவில் பாதித்தது.
kamalhaasan
ஒரு நடிகராக இந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும் அவருக்கு ஆறுதல் தரும் விதமாக அவர் தயாரித்த அமரன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி, தமிழ்நாட்டில் அதிகம்பேர் பார்த்த படம் என்கிற சாதனையையும் படைத்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து விஜய்யின் கோட் படத்துக்கு அடுத்தபடியாக இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய தமிழ் படம் என்கிற சாதனையையும் படைத்தது. இப்படத்தின் மூலம் கமலுக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... கம்பேக் கொடுக்கும் கமல்; பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா விஜய் சேதுபதி?
ulaganayagan Kamalhaasan
அமரன் படத்தின் வெற்றியை கூட கொண்டாட முடியாத அளவு செம பிசியாக இருக்கிறார் கமல். அவர் தற்போது அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க சென்றிருக்கிறார். சுமார் 3 மாதங்களாக அங்கு தங்கி ஏஐ தொழில்நுட்பம் பற்றி படித்து வரும் கமல்ஹாசன், தன் கைவசம் வரிசையாக படங்களையும் வைத்திருக்கிறார். இதில் இந்தியன் 3 மற்றும் தக் லைப் ஆகிய படங்களின் ஷூட்டிங் முடிந்து அடுத்த ஆண்டு ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
kamalhaasan Next Movie With Anbarivu
இந்த நிலையில், அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ள கமல் அங்கு தன் அடுத்த பட வேலைகளை பார்ட் டைமாக தொடங்கி இருக்கிறார். அவரின் அடுத்த படத்தை அன்பறிவு மாஸ்டர்கள் தான் இயக்க உள்ளனர். இப்படம் மூலம் அவர்கள் இருவரும் இயக்குனர்களாக அறிமுகமாக உள்ளனர். இப்படத்தின் டிஸ்கசன் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறதாம். இதற்காக அன்பறிவு மாஸ்டர்கள் இருவரும் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவர்கள் அங்கு கமல்ஹாசன் உடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... 2024-ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ