நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், ஷிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், யோகிபாபு, ரோபோ சங்கர், தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ரஜினி கேமியோ ரோலில் தான் நடிக்க உள்ளார். இதற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினி. இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள்... மருதநாயகம் கமல் கெட்-அப்பில் மாஸ் ஆக எண்ட்ரி கொடுத்த தனுஷ்... டிரெண்டாகும் வாத்தி நாயகனின் போட்டோஸ்
இதுதவிர லைகா நிறுவனம் தயாரிப்பில் மற்றுமொரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினியின் 171-வது படமாக தயாராகும் அப்படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளாரா. இவர் சூர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றிபெற்ற ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். இவர் தான் ரஜினியை வைத்து போலீஸ் கதையம்சம் கொண்ட படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்து மூன்று படங்களை கைவசம் வைத்துள்ள ரஜினிகாந்த், அண்மையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்து அவரிடம் தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ரஜினியின் இந்த திடீர் அழைப்பால் குழப்பத்தில் உள்ளாராம் லோகேஷ். ஏனெனில் தற்போது லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ், நெக்ஸ்ட் கைதி 2, விக்ரம் 2 என அடுத்தடுத்து லைன் அப் வைத்துள்ளதால் ரஜினியின் படத்திற்கு ஓகே சொல்லலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம். இந்த கூட்டணி கைகூடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... Lokesh kanagaraj : இந்த தப்பு இனி நடக்ககூடாது..! லோகேஷ் கனகராஜின் உத்தரவால் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் கெடுபிடி