நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது வாத்தி திரைப்படம் உருவாகி உள்ளது. வெங்கி அட்லூரி என்கிற தெலுங்கு இயக்குனர் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் டோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
வாத்தி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார் சம்யுக்தா. மேலும் இதில் நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வாத்தி திரைப்படம் நாளை அதாவது பிப்ரவரி 17-ந் தேதி உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிறுவனம் தான் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தையும் ரிலீஸ் செய்தது.
வாத்தி படத்தின் புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த வாத்தி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் உள்பட வாத்தி படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மருதநாயகம் கமல் கெட்-அப்பில் மாஸாக எண்ட்ரி கொடுத்த தனுஷ், வா வாத்தி பாடலை தெலுங்கில் பாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் வாத்தி படம் நிச்சயம் வெற்றிபெறும் என தனுஷ் நம்பிக்கை தெரிவித்தார்.