ரோபோ சங்கரை வனத்துறையிடம் வசமாக சிக்க வைத்த ஹோம் டூர் வீடியோ... வீட்டில் வளர்த்த 2 கிளிகள் பறிமுதல்

Published : Feb 16, 2023, 08:26 AM IST

ரோபோ சங்கரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 கிளிகள் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
ரோபோ சங்கரை வனத்துறையிடம் வசமாக சிக்க வைத்த ஹோம் டூர் வீடியோ... வீட்டில் வளர்த்த 2 கிளிகள் பறிமுதல்

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான ரோபோ சங்கர் தற்போது சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். தனுஷ் உடன் மாரி, அஜித் உடன் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த ரோபோ சங்கர் தற்போது ரஜினியின் ஜெயிலர் உள்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரோபோ சங்கரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

24

நடிகர் ரோபோ சங்கரின் வீடு சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. அவர் தனது வீட்டில் 2 கிளிகளை வளர்த்து வந்துள்ளார். இந்த இரண்டு கிளிகளும் அவர்களுக்கு பரிசாக வந்ததாம். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா விஜய்யின் பிகில் படத்தில் நடித்த சமயத்தில் இந்த இரண்டு கிளிகளும் பரிசாக வந்ததால், இந்த கிளிகளுக்கு பிகில், ஏஞ்சல் என செல்லமாக பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர். இந்த இரண்டு கிளிகளும் ரோபோ சங்கரின் குடும்பத்தினரிடம் அவ்வளவு பாசமாக பழகுமாம். ரோபோ சங்கரை கூட ரோபோ என்று தான் அழைக்குமாம்.

இதையும் படியுங்கள்... Yogi babu : சிக்சர், பவுண்டரிகளாக அடிச்சு நொறுக்க யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த ‘தல’

34

அப்படி அவர்கள் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த கிளிகளை வனத்துறையினர் தற்போது பறிமுதல் செய்துள்ளனர். ஏனெனில் இந்த வகை கிளிகளை வீட்டில் வளர்க்க அனுமதி கிடையாது என்பதனால் அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட அந்த இரண்டு கிளிகளும் தற்போது கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாம். நடிகர் ரோபோ சங்கர் தற்போது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சென்றுள்ளதால் அவர் சென்னை திரும்பியதும் அவரிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

44

சிக்கியது எப்படி?

தனியார் யூடியூப் சேனல் ஒன்று சமீபத்தில் ரோபோ சங்கரின் வீட்டில் ஹோம் டூர் வீடியோ ஒன்றை படமாக்கி உள்ளது. அப்போது வீட்டில் வளர்க்கப்படும் இந்த 2 கிளிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்று இருந்துள்ளது. இதைப்பார்த்து தான் யாரோ வனத்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் ரோபோ சங்கரின் வீட்டுக்கு சென்று அந்த இரண்டு கிளிகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த இரண்டும் அலெக்ஸாண்ட்ரியன் வகை கிளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Anushka Shetty: உச்ச கட்ட அதிர்ச்சி..! அரிய வகை நோயால் அவதிப்படும் நடிகை அனுஷ்கா ஷெட்டி!

Read more Photos on
click me!

Recommended Stories