சமீப காலமாக முன்னணி நடிகைகள் பலர், தாங்கள் எதிர்கொண்டு வரும் அரிய வகை நோய்கள் குறித்து வெளிப்படையாக கூறி அதிர வைத்து வருகிறார்கள்.
மேலும் நடிகை ஸ்ருதி ஹாசன், பூனம் கவுர், போன்ற நடிகைகளும் தங்களுடைய பிரச்சனை குறித்து மனம் திறந்த நிலையில்... தற்போது பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி வித்தியாசமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழில், நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமான முதல் படத்திலேயே கட்டுக்கடங்காத கவர்ச்சியை காட்டி இளம் ரசிகர்கள் மனதை அலைபாயவிட்ட அனுஷ்கா, பின்னர் சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் சீரிஸ், விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன், என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென தனி இடம் பிடித்தவர்.
அதே போல் அருந்ததி, பாகமதி, இந்திர சேனா, போன்ற வரலாற்று பெண்கள் கதாபாத்திரத்தை... அழுத்தம் திருத்தமாக நடிக்கும் ஆளுமை படைத்த நடிகை என்றும் பெயர் பெற்றவர். 35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் தான் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
'அயலி' வெப் தொடர் அம்மா நடிகை... அனுமோலின் ஹாட் கிளாமர் லுக் போட்டோஸ்!
இந்த பேட்டியில் ‘எனக்கு அரிதான நோய் உள்ளது. சிரிக்க வேண்டிய சூழ்நிலையில் நான் சிரிக்க ஆரம்பித்தால், அதைக் கட்டுப்படுத்துவது என் கையில் இல்லை. தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்துக் கொண்டே இருப்பேன். பலமுறை சிரித்துக்கொண்டே படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளதாக கூறி அதிர வைத்துள்ளார். தற்போது அனுஷ்கா ஷெட்டி பற்றிய இந்த தகவல், அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.