நடிகர் விஜய் நடிக்கும் 67-வது படம் லியோ. மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.
லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கு இரண்டு மாதங்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இதற்காக படக்குழுவினர் அனைவரும் கடந்த மாத இறுதியில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு சென்றனர். அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் சில இணையத்தில் கசிந்து படுவைரல் ஆகி வந்தன.
ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல் ஆனதால் செம்ம டென்ஷன் ஆன இயக்குனர் லோகேஷ் கனகராஜ், படக்குழுவினருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளாராம். அதன்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் இனி யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும் ஷூட்டிங் முடிந்த பின்னரே செல்போன் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்படுகிறதாம். இதனை கண்காணிக்க தனி குழு ஒன்றையும் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இனி ஒரு காட்சி கூட லீக் ஆகிவிடக் கூடாது என்பதில் லோகேஷ் உறுதியாக உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... Yogi babu : சிக்சர், பவுண்டரிகளாக அடிச்சு நொறுக்க யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த ‘தல’