இந்த தடவ என்ன கதை சொல்லப்போறாரோ? மாஸ் ஸ்பீச்சுடன் தயாரான "தலைவர்" - வேட்டையன் இசை வெளியீடு அப்டேட்!

Ansgar R |  
Published : Sep 16, 2024, 11:01 PM IST

Vettaiyan Audio Launch : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "வேட்டையன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

PREV
14
இந்த தடவ என்ன கதை சொல்லப்போறாரோ? மாஸ் ஸ்பீச்சுடன் தயாரான "தலைவர்" - வேட்டையன் இசை வெளியீடு அப்டேட்!
Super Star Rajinikanth

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்முறையாக, பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான "ஜெய்லர்" என்ற மெகா ஹிட் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது.

சமந்தாவுக்கு நாக சைதன்யா எப்படி ப்ரொபோஸ் செய்தார் தெரியுமா?

24
Rithika Singh

அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏற்கனவே சூர்யாவை வைத்து "ஜெய் பீம்" என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த ஞானவேல் இயக்கத்தில், தனது 170வது திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த திரைப்படத்திற்கு "வேட்டையன்" என்று பெயரிடப்பட்டது. இப்படத்தின் மூலம், முதல் முறையாக பிரபல நடிகர் அமிதாபச்சன் தமிழ் திரை உலகில் அறிமுகமாகும் நிலையில், பாஹத் பாசில், ராணா தகுபதி, துஷாரா மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

34
Fahadh Faasil

இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரபல நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படமும் அதே நாளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தது. ஆனால் அதன் பிறகு இந்த விஷயம் குறித்து பேசிய நடிகர் சூர்யாவும், கங்குவா திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேலும் "தமிழ் சினிமாவில் 50 ஆண்டு காலமாக மிகப்பெரிய நடிகராக, தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார். ஆகவே அவருடைய திரைப்படத்தோடு மோதுவது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது" என்று கூறி கங்குவா திரைப்படம் சோலோவாக விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

44
Vettaiyan Audio Launch

இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 20ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரபல நடிகர் பாஹத், ராணா, மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன கதை கூற பேச போகிறார் என்கின்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஜெயிலர் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய "காக்கா கழுகு" மிகப்பெரிய அளவில் விமர்சன பொருளாக மாறியது.

"பொலிவிழந்த என் மேனி" மயோசிடிஸ் நோய்க்கான மருந்தால் தான் பட்ட அவதி - வருத்தப்படும் சமந்தா!

Read more Photos on
click me!

Recommended Stories