சமந்தாவுக்கு நாக சைதன்யா எப்படி ப்ரொபோஸ் செய்தார் தெரியுமா?

நாக சைதன்யா, சமந்தா காதல் கதையில் பல திருப்பங்கள், அனுபவங்கள் இருந்தன. ஏமாய சேசாவே படத்தில் தான் முதன் முதலில் இருவரும் சந்தித்து கொண்டனர்.

Samantha

நாக சைதன்யா, சமந்தா காதல் கதையில் பல திருப்பங்கள், இருந்தன. ஏமாய சேசாவே படத்தில் தான் முதன் முதலில் இருவரும் சந்தித்து கொண்டனர். அதன் பிறகு படிப்படியாக அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறியது. அதன் பிறகு ஆட்டோநகர் சூர்யா, மனம் போன்ற படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தனர். 

Samantha and Nagachaitanya

நீண்ட நாட்கள் காதலில் இருந்த நாக சைதன்யா சமந்தா அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக 2021 ஆம் ஆண்டு இந்த ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தது. இவர்கள் இருவரின் விவாகரத்தும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரையுலக மக்களுக்கும் பெரும் அதிச்சையை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். ரசிகர்கள் இதில் இருந்து மீள்வதற்குள், நடிகை ஷோபிதா துலிபாலாவை நாக சைதன்யா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தார்.


Samantha and Chaitanya Love Proposal

சமந்தா, நாக சைதன்யா TFPC உடன் நீண்ட நாட்களுக்கு முன் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றனர். அதில் திரைத்துறையில் அவர்களின் பயணம், காதல் குறித்து பேசினர். பேசும் போது, நாக சைதன்யாவை சமந்தாவுக்கு ப்ரொபோஸ் செய்யுமாறு நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.

Samantha Reaction

அதற்கு சமந்தா, “நீங்க என்ன நினைக்கிறீங்களோ அத சொல்லுங்க” என்றார். முதலில் வெட்கப்பட்ட சைதன்யா, “என் இதயத்தில் இருந்து, சமந்தா, நான் உன்னை காதலிக்கிறேன்” என்று சொன்னார். சைதன்யாவின் ப்ரொபோசலில் திருப்தி அடையாத சமந்தா, “நீங்க உண்மையாவே நம்புறீங்களா? நான் நம்பல.” என்று கூறினார். அவர் மீண்டும் இன்னும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு சொல்ல வேண்டும் என்று கேட்டார். சைதன்யா தான் சொல்வதை எப்போதும் புரிந்து கொள்வேன் என்று கூறி மீண்டும் ப்ரொபோஸ் செய்தார்.

Samantha in Coffee with Karan

காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா, நாக சைதன்யாவுடனான தனது பிரிவு சுமூகமானது அல்ல என்று கூறினார். பிரிவது கடினம் என்று சமந்தா அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். ஆனால் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. "நான் எப்போதையும் விட பலமாக இருக்கிறேன்." என்று கூறினார். அவருக்கு ஏதேனும் கடினமான உணர்வுகள் இருக்கிறதா என்று கரண் அவரிடம் கேட்டார்.

Samantha Angry

அதற்கு நடிகை சமந்தா, “நீங்கள் எங்கள் இருவரையும் ஒரு அறையில் வைத்தால், நீங்கள் கூர்மையான பொருட்களை மறைக்க வேண்டுமா? ஆம், தற்போதைக்கு, அப்படி ஒளித்து வைத்து நல்லது என கூறினார். 

Naga Chaitanya Engagement

நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சாயின் வீட்டில் நடைபெற்றது. சாயின் தந்தை, நடிகர் நாகர்ஜூனா அக்கினேனி தனது ட்விட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிச்சயதார்த்தம் சாயின் ரசிகர்கள் மற்றும் அவரது முன்னாள் மனைவி சமந்தா ரூத் பிரபுவின் ரசிகர்களிடையே சமூக ஊடகங்களில் சண்டையை உருவாக்கியது.  

Latest Videos

click me!