இவரது காதலரான, சித்தார்த் ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி சம்பளமாகப் பெறுகிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்தின் தகவல்படி, இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததற்காக இந்த நடிகர் ரூ. 4 கோடி சம்பளமாகப் பெற்றார். அடுத்து இந்தியன் 3 படத்தில் நடிக்க இருக்கிறார். சித்தார்த் சூர்யநாராயணன் என்கிற இயற்பெயர் கொண்ட சித்தார்த், முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
நடிப்பு மட்டுமின்றி, சித்தார்த் ஒரு திரைக்கதை எழுத்தாளர். தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் சித்தார்த் நடித்த பொம்மரில்லு, உள்ளிட்ட பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தமிழில் இவர் கடைசியாக தயாரித்து நடித்திருந்த சித்தா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.