பிரியங்கா - மணிமேகலை சண்டை! மா.கா.பா-வின் நச் கருத்து; பாவனா கொடுத்து புது விளக்கம்!

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி... கடந்த 4 சீசனாக கோமாளியாகவும், இந்த சீசனில் தொகுப்பாளராகவும் களமிறங்கிய மணிமேகலை 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை விட்டு வெளியேற பிரியங்கா தான் காரணம் என கூறியுள்ள நிலையில், இதற்க்கு விஜய் விடி தொகுப்பாளர்கள் கொடுத்த விளக்கம் மற்றும் கருத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Cook with comali show

ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை தற்போது பிக்பாஸ் வீடு போல் மாற்றி விட்டார் பிரியங்கா என, ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டி வருவதை பார்க்க முடிகிறது. அதாவது தன்னுடைய 17.. 18 வயதியிலேயே, சன் டிவி மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கிய மணிமேகலை, பின்னர் மெல்ல மெல்ல தன்னுடைய திறமையால் உயர்ந்தார். ஒரே ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ள மணிமேகலைக்கு அந்த படம் கைகொடுக்காததால், மீண்டும் சன் மியூசிக் தொலைக்காட்சியிலேயே பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். 

Manimegalai and Hussian:

நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை மணிமேகலை காதலித்த நிலையில், பெற்றோர் மதத்தை காட்டி இவரின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க... தன்னுடைய குடும்பத்தை மீறி, காதலனை கரம் பிடித்தார். ஹுசைன் வீட்டில் மணிமேகலை மதம் மாற வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் அதற்க்கு உடன்படாமல் இருவருமே அணைத்து மதங்களையும் விரும்பும் அழகிய ஜோடிகளாக வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் மணிமேகலையின் பெற்றோர் இவரை மீண்டும் ஏற்று கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் பொருளாதார ரீதியாக மிகவும் அவதிப்பட்ட மணிமேகலைக்கு கை கொடுத்து தூக்கி விட்டது விஜய் டிவி தான். பின்னரே யூ டியூப் துவங்கி அதன் மூலமும் லட்ச கணக்கில் சம்பாதிக்க துவங்கினார். தற்போது வீடு வாசல் 3 சொகுசு கார் என ஜாம் ஜாம்னு வாழ்ந்து வரும் மணிமேகலை... குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-ஆவது சீசனை தொகுத்து வழங்கி வந்தார்.


Manimegalai comali to Anchor

இவர் கோமாளியாக இருக்கும் போதே இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருந்த நிலையில், தொகுப்பாளராக இருக்கிறார் என்றால் சொல்லவா வேண்டும்?. ரக்ஷனை தன்னுடைய காமெடியான பேச்சால் அலற விட்டார். சில கோமாளிகள் கூட இவரை வைத்து வாரம் வாரம் கன்டென்ட் கொடுத்ததை பார்க்க முடிந்தது. ஒரு வழியாக, 'குக் வித் கோமாளி' செமி ஃபைனலில்... முதல் வெற்றியாளராக சுஜிதா தனுஷ் ஃபைனலுக்குள் நுழைந்த நிலையில், இவரை தொடர்ந்து பிரியங்கா, ஃஇர்பான் ஆகியோர் ஃபைனலுக்குள் நுழைந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது பிரியங்கா தான் ஒரு போட்டியாளர் என்பதை மறந்து... தொகுப்பாளினி மணிமேகலையை டாமினேட் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் செமி ஃபைனல் நிகழ்ச்சியில் இருந்து பாதிலேயே வெளியேறிய மணிமேகலை சமூக வலைத்தளத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறி போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.

Cook with comali season 5

அந்த பதிவில் மணிமேகலை கூறி இருந்தாவது, "இனி நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன், எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும் அதில் என்னுடைய நூறு சதவிகித உழைப்பை கொடுக்கும் திறன் என்னிடம் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் பயணித்து வருகிறேன். இருப்பினும் எதை விடவும் எனக்கு மிகப்பெரியது "சுயமரியாதை". அதை இழந்து எந்த ஒரு இடத்திலும் இருக்க நான் விரும்பவில்லை". 

"நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கு அதுவே முதல் காரணம். நிகழ்ச்சியின் இந்த சீசனில், குறிப்பிட்ட பிரபலமான ஒரு பெண் தொகுப்பாளினி, அதுவும் குக்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்னுடைய பணியில் அடிக்கடி குறுக்கிட்டு என்னுடைய வேலையை நான் சரியாக செய்யாத வண்ணம் பார்த்துக் கொண்டார். அவருடைய ஆதிக்கமே எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது". என கூறி இருந்தார். மணிமேகலை கூறிய அந்த குக் பிரியங்கா தான் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில்... தற்போது இந்த சர்ச்சை குறித்து பிரியங்காவின் சக தொகுப்பாளர் மாகாபா தன்னுடைய கருத்தையும், தொகுப்பாளினி பாவனா தன்னுடைய விளக்கத்தையும் கூறியுள்ளார்.

Ma Ka Pa Anand

மாகாபா குக் வித் கோமாளி பிரியங்கா - மணிமேகலை சண்டை குறித்து பேசும்போது... 'அந்த ஷோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்ல. அதனால நான் கருத்து சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல. அவங்க ரெண்டு பேரும் தான் அடிச்சுக்கணும். நாம காட்டு வழியா போகும்போது, ரெண்டு யானை சண்டை போட்டதுனா நாம சமாதானம் பண்ண போகக்கூடாது. நம்மள நசுக்கிட்டு போயிடும்... நாம வேடிக்கை பார்க்கிறது தான் நல்லது. அதே போல் இந்த பிரச்சனை நாட்டுக்கு முக்கிய விஷயம் கிடையாது. என தன்னுடைய நச் பதிலை கொடுத்துள்ளார்.

Bhavana

இவரை தொடர்ந்து பாவனா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் பிரியங்கா தான் என கூறியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தை வட்டமிட்ட நிலையில், இதற்க்கு பாவனா சூப்பர் சிங்கரில் இருந்து நான் முழுமையாக விளக்க காரணம் பிரியங்கா தான் என எந்த இடத்திலும் நான் சொல்லவே இல்ல. நான் என்னுடைய கனவை தொடர்வதற்காகவும், என் கணவர் மும்பையில் இருப்பதால் அங்கே வேலை செய்யவும் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினேன். பிரியங்காவால் தனது ஆங்கரிங் கனவு பாழாகி விட்டதாக நான் சொன்னதாக வெளியாகும் செய்திகள் உண்மை இல்லை என கூறியுள்ளார்.

Latest Videos

click me!