பாலாஜிக்கு டாடா கட்டிவிட்டு.. கமர்சியல் கிங்குடன் இணைந்த நயன் - வெளியான மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்!

First Published | Sep 16, 2024, 7:21 PM IST

Mookuthi Amman 2 : பிரபல வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகம் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Actor RJ balaji

தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, அதன் பிறகு காமெடி நடிகராக உருவெடுத்து, பின் ஹீரோவாக மாறியவர் தான் ஆர்.ஜே பாலாஜி. திரைத்துறையில் பயணிப்பதற்கு முன்னதாக இவர் பிரபல பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015ம் ஆண்டு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான "நானும் ரவுடி தான்" என்கின்ற திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. 

அது மட்டுமல்லாமல் சைமா வழங்கும் சிறந்த காமெடியனுக்காக விருதும் அந்த ஆண்டு இவருக்கு அப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நாயகனின் நண்பனாக காமெடி கலந்த தனது கலகலப்பான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வந்த ஆர்.ஜே பாலாஜி, ஒரு கட்டத்தில் நாயகனாக உருவெடுத்தார்.

ஒரே நாளில் போடப்பட்ட டியூன்.. விஜயகாந்துக்காக பிளைடில் பறந்த பாடல் - மெய்சிலிர்க்க வைத்த இளையராஜா!

RJ Balaji

கடந்த 2019ம் ஆண்டு பிரபல இயக்குனர் கே.ஆர் பிரபு இயக்கத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வழங்கிய LKG என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து அசத்தினார் ஆர்.ஜே பாலாஜி. அந்த திரைப்படம் மக்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ச்சியாக அவர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இந்த சூழலில் தான் "தியா" என்கின்ற திரைப்படத்தில் பிரபல நடிகை நயன்தாராவோடு இணைந்து ஆர்.ஜே பாலாஜி நடித்திருந்த நிலையில், "மூக்குத்தி அம்மன்" என்ற திரைப்படத்தை நயன்தாராவை வைத்து இயக்க முடிவு செய்தார். 

சரவணன் மற்றும் ஆர்.ஜே பாலாஜி ஆகிய இருவருடைய எழுத்து மற்றும் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை தயாரித்து வழங்கியதும் பிரபல வேல்ஸ் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டும் 3 படங்களில் நடித்து அசத்திய பாலாஜி விரைவில் மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

Tap to resize

Mookuthi amman

மூக்குத்தி அம்மன் பட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நயன்தாரா அந்த திரைப்படத்தில் அம்மனாக நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. அவருக்கு பதிலாக பிரபல நடிகை திரிஷா தான் அந்த திரைப்படத்தில் அம்மனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஒரு கட்டத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்படுவதாகவும் ஆர்.ஜே பாலாஜி வேறு சில கதைகளில் தனது கவனத்தை செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. 

இருப்பினும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் அமையாமல் போனதற்கு பாலாஜி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணம் என்று பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் நயன்தாரா தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் கமிட்டாகி வருவது மட்டுமே இந்த திரைப்படம் மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு போகாவதற்கு காரணம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

mookuthi amman 2

இந்த சூழலில் தான் பிரபல வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கியமான அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கட்டாயம் நடிக்கின்றார் என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தை இயக்கப் போவது பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் ஜே பாலாஜி அல்ல, அவருக்கு மாறாக இந்த திரைப்படத்தை இயக்கப் போவது தமிழ் சினிமாவின் "கமர்ஷியல் கிங்" என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சுந்தர் சி தான். 

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அப்பிடத்திற்கான போஸ்டர் ஒன்றையும் வேல்ஸ் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகத்தை வெளியிட்டு அதை மெகா ஹிட் திரைப்படமாக மாற்றிய சுந்தர் சி, தொடர்ச்சியாக "கேங்கர்ஸ்" என்கின்ற திரைப்படத்தை பிரபல நடிகர் வடிவேலுவை வைத்து இயக்கி வருகிறார். அது மட்டுமல்லாமல் கலகலப்பு திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் அவர் விரைவில் இயக்க உள்ள நிலையில், இப்போது மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்க உள்ளது மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

பிரியங்கா - மணிமேகலை சண்டை! மா.கா.பா-வின் நச் கருத்து; பாவனா கொடுத்த புது விளக்கம்!

Latest Videos

click me!