"பொலிவிழந்த என் மேனி" மயோசிடிஸ் நோய்க்கான மருந்தால் தான் பட்ட அவதி - வருத்தப்படும் சமந்தா!

First Published | Sep 16, 2024, 9:56 PM IST

Actress Samantha : நடிகை சமந்தா தனது மயோசிடிஸ் நோய்க்காக உட்கொண்ட மருந்துகளால் தனக்கு ஏற்பட்ட ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி பேசியுள்ளார். 

Samantha

சென்னை பல்லாவரத்தில் பிறந்து, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கல்வி பயின்று, மாடலிங் துறையில் பயணித்து வந்த பெண் தான் சமந்தா ருத் பிரபு. பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மாவின் பார்வையில் பட்ட சமந்தாவிற்கு கிடைத்த முதல் பட வாய்ப்பு தான், கடந்த 2010ம் ஆண்டு தமிழில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" என்கின்ற திரைப்படம். அதே திரைப்படத்தை தெலுங்கு மொழியில் சமந்தாவை ஹீரோயினாக வைத்து அசத்தியிருந்தார் கௌதம் வாசுதேவ் மேனன். 

அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் கடந்த 13 ஆண்டுகளாக டாப் நடிகையாக அவர் வளம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. ஒரு படத்திற்கு சுமார் 4 முதல் 6 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெரும் டாப் நடிகை அவர். கடந்த 2017ம் ஆண்டு தன்னுடன் முதல் திரைப்படத்தில் இணைந்து நடித்த பிரபல நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு அவரை பிரிந்தார்.

பாலாஜிக்கு டாடா கட்டிவிட்டு.. கமர்சியல் கிங்குடன் இணைந்த நயன் - வெளியான மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்!

Samantha Marriage

தனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், பெண் தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருந்த சமந்தா. விரைவில் தானும் நாக சைதன்யாவும் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பதாகவும். திரைத்துறையில் இருந்து சில காலம் ஓய்வு பெற்று குடும்ப தலைவியாக, ஒரு குழந்தைக்கு தாயாக சில காலம் வாழ தான் ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார் சமந்தா. 

ஆனால் இந்த சூழலில் தான், கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் நாக சைதன்யாவை சமந்தா பிரிந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் சிங்கிளாக வாழ்ந்து வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு பிரபல நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அண்மையில் அவர்களுக்கு நிச்சயதார்த்த விழாவும் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நடிகை சமந்தா இப்போது வரை தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.

Tap to resize

Actress Samantha

இந்த நிலையில் தான் நடிகை சமந்தா ரூத் பிரபு, கடந்த 2022ல் தனக்கு ஒரு "ஆட்டோ இம்யூன்" பிரச்சனை இருப்பதாகவும், மேலும் தனக்கு "மயோசிடிஸ்" இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்தார். இது அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க மன மற்றும் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்தார் அவர். அவர் அந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டதிலிருந்து தனது உடல்நிலை குறித்த அப்டேட்களை இன்ஸ்டா மூலம் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் சாம். 

இந்த சூழலில் தான் கடந்த செப்டம்பர் 15, 2024 அன்று (நேற்று), சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது தோல் பராமரிப்பு குறித்து சில வருத்தம் தரும் பதிவுகளை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், சமீப காலமாக தனது சருமம் நன்றாக இருப்பதாகவும், முன்பு போல் மேக்கப் போட்டு மறைக்க வேண்டியதில்லை என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

SamanthaSkin Care

தான் நோய்வாய்ப்பட்டபோது, ​​​​அதைச் சமாளிக்க சில வலுவான மருந்துகளை எடுக்க வேண்டியிருந்தது என்று சமந்தா கூறியிருந்தார். இருப்பினும், அந்த மருந்துகளால் வறட்சி, வீக்கம் மற்றும் பல பிரச்சனைகளை தனது அது உருவாக்கியதால் அது அவரது தோலை பாதித்தது என்று கூறியுள்ளார். மக்கள் தனது தோலைப் பற்றி அடிக்கடி கருத்து தெரிவித்ததையும் சமந்தா நினைவு கூர்ந்தார். அவர்களின் கருத்துக்கள் தன்னை பெரிய அளவில் பாதித்ததாகவும் கூறினார்.
         
மேலும் தனது சருமத்தின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க தொடர்ச்சியாக பல வழியை தான் தேர்வு செய்ததாக சமந்தா மேலும் கூறினார். தான் பிகோ லேசர், சிவப்பு விளக்கு சிகிச்சை மற்றும் நிணநீர் வடிகால்களில் கவனம் செலுத்தும் ஃபேஷியல் செய்து வருவதாகவும், இது தோல் பிரச்சினைகளை சமாளிக்க உதவியது என்றும் பகிர்ந்துள்ளார்.

ராஜ குடும்பத்தில் பிறந்த நடிகை அதிதி - சித்தார்த் ஜோடியின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Latest Videos

click me!