தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்கிற பெயருடன் 70 வயதிலும் ஹீரோ சப்ஜெக்ட் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான நிலையில் கலவையான விமர்சனங்ளையே பெற்றது.
இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்... 'ஜெயிலர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில், ரம்யா கிருஷ்ணன், விநாயக், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது.
மேலும் செய்திகள்: மர்மநபர்களால் தாக்கப்பட்ட நடிகர் விஷாலின் வீடு..! போலீசில் பரபரப்பு புகார்..!
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடைவதற்கு முன்பாகவே ரஜினிகாந்த் அடுத்து தன்னுடைய 170 ஆவது படத்தை யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார், அந்த படத்தில் நடிக்க அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி சில விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
இந்த படத்திற்காக ரஜினிக்கு மட்டும் 120 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 'அண்ணாத்த' படத்திற்கு சுமார் 110 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி, 47 வருடங்களாக தன்னுடைய சம்பளத்தை குறைக்காமல்... தொடர்ந்து ஏற்றிக்கொண்டே செல்கிறார் என சில விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. மேலும் ரஜினிகாந்தின் 170 ஆவது படம் குறித்த தகவல், டிசம்பர் 12ஆம் தேதி அவரது பிறந்தநாள் அன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.