ஹிட் அடித்த சூப்பர் ஸ்டாரின் 5 ரீமேக் படங்கள் எவை எவை தெரியுமா?

First Published Oct 17, 2022, 5:53 PM IST

பிளாக்பஸ்டர் படங்களால் ஐந்து தலைமுறை ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்து வைத்துள்ள சூப்பர் ஸ்டார் நடித்த சில ரீமேக் படங்கள் குறித்து பார்க்கலாம்.. 

உலக நாயகன் கமலஹாசன் உடன் திறையிடத்தை பகிர்ந்து கொண்டு ரஜினிகாந்த் முதல் முதலில் அறிமுகமானது அபூர்வ ராகங்களில் தான். பிளாக்பஸ்டர் படங்களால் ஐந்து தலைமுறை ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்து வைத்துள்ள சூப்பர் ஸ்டார் நடித்த சில ரீமேக் படங்கள் குறித்து பார்க்கலாம்.. 

rajinikanth

பில்லா :

1980 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் ஆக்சன் திரில்லராக வெளியாகியிருந்தது பில்லா. இந்த படத்தில் பில்ல, ராஜாப்பா என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ரஜினி.  கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் வெளியாகி இருந்த இது 1978 ஆம் ஆண்டு அமிதாப்பச்சனின் டான் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் ஸ்ரீ பிரியா மற்றும் கே பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றிகளை கண்டு  ரஜினிகாந்தின் வாழ்க்கை பாதையை வேறொரு கோணத்திற்கு கொண்டு சென்றது.

மேலும் செய்திகளுக்கு...விக்ரம் 32 - வை கொண்டாடும் ரசிகர்கள்...மாஸ் வீடியோவை பகிர்ந்து நன்றி சொன்ன சீயான்..

rajinikanth

தில்லு முல்லு : 

இந்த படத்தில் அண்ணன் தம்பி போல நடித்து மற்றவர்களை ஏமாற்றி இருப்பார் ரஜினிகாந்த். நகைச்சுவை நாடகமான இதில்  தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சௌகார் ஜானகி, மாதவி, பூரணம் விஸ்வநாத் மற்றும் விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இது 1979 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படம் கோல்மால் படத்தின் ரீமேக்காகும்.

rajinikanth

மிஸ்டர் பரத் :

எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தந்தையை பழிவாங்கும் மகனாக நடித்திருப்பார் ரஜினிகாந்த். இதில் சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ்வி சேகர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் அமிதாபச்சன் நடிப்பில் வெளியான திரிசூல் படத்தின் ரீமேக் ஆகும். இதில் சஞ்சய் குமார், ஷாகி கபூர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...Happy Birthday Keerthy Suresh : கடாயும் கையுமாய் கீர்த்தி சுரேஷ்...கிச்சன் போட்டோஸ் இதோ

rajinikanth

மன்னன் : 

கன்னட திரைப்படமான அனுராகாவின்  ரீமேக்காக இந்த படம் உருவானது. இதில் விஜயசாந்தி, மனோரமா, குஷ்பூ, விஷ்ணு, கவுண்டமணி முக்கிய வேடங்கள் தரித்து இருந்தனர். தொழிற்சங்க தலைவராக நாயகன் தோன்றியிருப்பார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

rajinikanth

விடுதலை :

1986 பரோஸ் கானின் ஆக்சன் என்டர்டைன்மெண்டான குர்பானி என்னும் படத்தின் ரீமேக் தான் விடுதலை. கே விஜயன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் கன்னட நடிகர் விஷ்ணுவர்தன்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

click me!