Published : Oct 17, 2022, 04:37 PM ISTUpdated : Oct 17, 2022, 04:40 PM IST
சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. கடாயும் கையுமாக கீர்த்தி சுரேஷ் இருக்கும் கலர்ஃபுல் போட்டோக்கள் தான் இவை.
பின்னர் கடந்த 2000 -ம் ஆண்டு இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இவர் கீதாஞ்சலி என்னும் படம் மூலம் கதாநாயகியாக உருவெடுத்தார்.
48
keerthy suresh
தமிழுக்கு அறிமுகமாக எண்ணிய இவர் இது என்ன மாயம் படத்தில் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். இங்கு சில படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டதால் டாப் டென் நாயகிகளில் முக்கியமானவராக மாறிவிட்டார்.
58
keerthy suresh
அதோடு மகாநதி படத்தில் சாவித்திரிதேவியாக நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.
இந்த அறிமுகம் இவருக்கு பாலிவுட் வரை வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகிறது. இந்த வருட துவக்கத்திலிருந்து இவர் நடிப்பில் வெளியான குட் லக் சகி, சாணி காகிதம், சர்க்காரு வாரி பாட்டா, வாசி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
78
keerthy suresh
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு படம் என்கிற விதத்தில் கட்டாயம் ஒரு வருடத்திற்கு நான்கிலிருந்து 5 படங்களில் நடித்து விடுகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் நடிப்பில் மாமன்னன், தசரா, போலே சங்கர் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.
88
keerthy suresh
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் வாழ்த்து சொல்ல மறக்கவில்லை. இந்நிலையில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. கடாயும் கையுமாக கீர்த்தி சுரேஷ் இருக்கும் கலர்ஃபுல் போட்டோக்கள் தான் இவை.