தமிழில் மென்மையான காதல் படங்களை இயக்கி பல வெற்றிகளை கொடுத்த இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான, 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும்... திடீர் என கடந்த 2014ம் ஆண்டு, மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
நீச்சல் குளத்தில் எடுத்து கொண்ட புகைப்படம், பீச் பிகினி என தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை குடும்பத்தோடு எடுத்து பதிவிட்டு... பரபரப்பை ஏற்படுத்தும் சமீரா, தற்போது தன்னுடைய சுட்டி மகன் மற்றும் மகளுடன் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் இந்த கியூட் புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.