இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்து வருபவர் கே.எல்.ராகுல். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு காதல் வதந்திகளில் சிக்கிய கிரிக்கெட் பிரபலமாவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நடிகை நிதி அகர்வாலுடன் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், சமீப காலமாக பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியை காதலித்து வருவதாக தகவல் வெளியானது.