நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவிற்கான உடல் வாகுவில் இல்லை என பல்வேறு நெகடிவ் விமர்சனங்கள், சுற்றி வந்த நிலையில்... தற்போது செம்ம ஃபிட்டாக மாறி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பல நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
27
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் விஜய் சேதுபதி. இந்த படம் தேசிய விருதை பெற்றது மட்டும் இன்றி, நடிகர் விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதி தேர்வு செய்து நடித்த திரைப்படங்களான, பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும், போன்ற படங்கள் அடுத்தடுத்து ஹிட் லிஸ்டில் இணைந்ததால்... முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்தார் விஜய் சேதுபதி. குறிப்பாக இவர் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்த நானும் ரவுடிதான் படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.
47
ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என முன்னணி நடிகர்கள் படங்களில் தலைகாட்டி வரும் விஜய் சேதுபதி... தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஹீரோவாக நடிக்க இவர் வாங்கும் சம்பளத்தை விட, வில்லனாக இவரை நடிக்க வைக்க பலர் ஆர்வம் காட்டி வருவதோடு, சம்பளத்தையும் அள்ளிக்கொடுக்கிறார்கள். தமிழ் படங்களை விட ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் பிசியாக மாறியுள்ளார் விஜய் சேதுபதி.
67
அந்த வகையில் தற்போது இவரின் கைவசம், மூன்று இந்தி திரைப்படங்களும், 2 தமிழ் மற்றும் ஒரு தெலுங்கு திரைப்படங்களும் உள்ளது. மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிஸ்பி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
77
இந்நிலையில் விஜய் சேதுபதி பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும், இவர் மிகவும் குண்டாக இருப்பதாக சில நெகடிவ் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக... விஜய் சேதுபதி, செம்ம பிட்டாக மாறி வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மிக குறுகிய காலத்தில், விஜய் சேதுபதி எப்படி பிட்டாக மாறினார் என பலர் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.