சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் மகனான லிங்கா பார்ப்பதற்கு அப்படியே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், இளம் வயது தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், திரையுலகில் காலடி எடுத்து வைத்து... சாதித்து காட்டியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒரு கண்டெக்டராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்து, பல்வேறு சவால்களைக் கடந்து, இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவும், தனித்தன்மையுடனும் காட்டியது என்றால் அது அவருடைய ஸ்டைல் தான்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை படையப்பா, அருணாச்சலம், பாட்ஷா, முத்து, பாபா, வீரா போன்ற படங்கள் தற்போது வரை பல ரசிகர்களின் ஃபேவரட் திரைப்படங்களாக உள்ளது.
இந்நிலையில் நேற்று தன்னுடைய 73 வது பிறந்தநாளை, ரஜினிகாந்த் கொண்டாடிய நிலையில்... அவருக்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ரஜினிகாந்தின் வீட்டின் முன் குவிந்து, அவருடைய ரசிகர்கள் கேக் வெட்டி தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இதில் ஐஸ்வர்யாவின் மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் உள்ளனர். குறிப்பாக லிங்காவை பார்ப்பதற்கு அப்படியே இளம் வயது ரஜினிகாந்த் போலவே இருப்பதாக பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த புகைப்படமும் படு வைரலாகி வருகிறது.
திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான மனைவி... அப்பா ஆகப்போகும் குஷியில் ஆர்.ஆர்.ஆர் நாயகன்
கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த திரைப்படம் வெளியான நிலையில்... இதைத்தொடர்ந்து ஜெயிலர் படம் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தில் முத்து வேல் பாண்டியனாக ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கிலிம்ஸி வீடியோ ஒன்றை வெளியிட்டு தலைவரின் ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.