ஜாக்கெட் போடாமல் சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா நடத்திய போட்டோ ஷூட்..! விமர்சித்த நெட்டிசனுக்கு நச் பதிலடி!

Published : Apr 20, 2023, 04:01 PM IST

சுந்தரி சீரியல் நடிகை, ஜாக்கெட் போடாமல் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படத்தை, விமர்சித்த நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.  

PREV
17
ஜாக்கெட் போடாமல் சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா நடத்திய போட்டோ ஷூட்..! விமர்சித்த நெட்டிசனுக்கு நச் பதிலடி!
sundari gabriella sellus

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகளின் வரவேற்பு அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் மைம் கலைஞராகவும், டிக் டாக் பிரபலமாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி.. பின்னர் நடிகை நயன்தாரா நடித்த 'ஐரா' படத்தில், நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் கேப்ரியல்லா.
27
sundari gabriella sellus

இவருக்கு, அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை என்றாலும், சன் டிவி தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும், சுந்தரி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த   கேபி  பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். 
 

தங்கம்போல் தகதகவென மின்னும் சேலையில்... இடுப்பழகு தெரிய போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் போட்டோஸ்

37
sundari gabriella sellus

மேலும் இவருக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, மீண்டும் வெள்ளித்திரை வாய்ப்புகளை பெற்று தந்தது. அந்த வகையில், கேபிரியல்லா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷாவுடன் இணைந்து நடித்த, N4 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கேபியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று தந்தது.

47

அதே போல் இவர் நடித்து வரும், சுந்தரி சீரியலும்... மற்ற சீரியலுக்கு டிஆர்பி-யில் செம்ம டஃப் கொடுத்து வருகிறது. ஒரு குக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண், சிறு வயதில் இருந்தே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்கிற கனவுடன் வளர, திருமணம் வாழ்க்கையில் தோல்வியடைந்து, எப்படி... தன்னுடைய கனவை எட்டிப்பிடிக்க தடைகளை தாண்டி போராடுகிறாள் என்பதை மையமாக வைத்து பல்வேறு திருப்புமுனைகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
 

மாளவிகா மோகனனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! உடல் மெலிந்து ஒல்லி குச்சிபோல் போல் மாறிட்டாரே? வைரல் போட்டோஸ்!

57

கேபிரியல்லா நடிப்பை தாண்டி, சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ள நிலையில், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர்... ஜாக்கெட் போடாமல் போட்டோ ஷூட் செய்து, அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இவர்... அதற்க்கு "சுருங்கப் போகும் தோலுக்கு... ஓராயிரம் விமர்சனம்! சுருங்கிய பின்பும் தொடரட்டும் எனது சுதந்திரம் என கேப்ஷன் கொடுத்திருந்தார்.

67

 இந்த புகைப்படத்திற்கும், கேப்ஷனுக்கும்... ஒரு தரப்பு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவித்தாலும், மற்றொரு தரப்பினர், ஏன் ஜாக்கெட் போடாமல் போட்டோ ஷூட் நடத்தி, எதோ கேப்ஷன் போட்டு...  தமிழரோட பண்பையும் ஒழுக்கத்தையும் காத்துல பறக்க விட்டுட்டு, தப்ப சரின்னு சொல்ல வேண்டியது' என விமர்சனம்செய்தார்.

நம்பிய தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. நம்பிக்கை துரோகம் செய்தாரா ஸ்ருதி? தனுஷுடனான டேட்டிங் குறித்து நச் பதில்!

77

இந்த பதிவை பார்த்து கடுப்பான கேப்ரியல்லா, அந்த நெட்டிசன் கமெண்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு, திறமைக்கும்... உடலுக்கும்... சுய விருப்பத்திற்கும் வித்தியாசம் அறியாத வேடிக்கை மனிதர்கள். என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் பழையது என்றாலும், தற்போது மீண்டும் வைரலாக பார்க்கப்பட்டு சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

click me!

Recommended Stories