மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நடிகை சமந்தா, தற்போது மீண்டும் சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து குஷி என்கிற படத்தில் நடித்து வரும் அவர், சிட்டாடெல் என்கிற வெப் தொடரிலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர்.