அவர் தன் தாயின் உதவியுடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னுடைய உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். ஆராத்யாவின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆராத்யா குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதோடு, அந்த வீடியோக்களை உடனடியாக நீக்க கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.