தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பேமஸ் ஆன சூரி, இன்று தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் வெற்றிமாறன் தான். அவர் தன்னுடைய விடுதலை படத்தின் மூலம் சூரியை நாயகனாக நடிக்க வைத்து அவருக்குள் இருக்கும் நடிப்புத்திறமையை உலகறிய செய்தார்.