Khushbu Sundar C 25th Wedding Anniversary : நடிகை குஷ்புவும் இயக்குனர் சுந்தர் சி-யும் காதல் திருமணம் செய்துகொண்டு இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தங்கள் திருமண நாளை கொண்டாடி உள்ளனர்.
25
Khushbu, Sundar C Wedding Anniversary
1990-களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் முதன்முதலில் இயக்குனர் சுந்தர் சி உடன் பணியாற்றிய படம் முறைமாமன். கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் தான் இவர்களின் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது. குஷ்பூவை பார்த்ததும் காதலில் விழுந்த சுந்தர் சி, சுற்றிவளைக்காமல் நேரடியாக குஷ்புவிடமே சென்று நமக்கு குழந்தை பிறந்தால் உன்னைப்போல் இருக்குமா? இல்லை என்னைப்போல் இருக்குமா? என்று கேட்டிருக்கிறார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத குஷ்பு, என்ன சொல்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி போனாராம்.
35
Khushbu, Sundar C Visit Palani Murugan Temple
இருப்பினும் சுந்தர் சி-யின் தைரியத்தால் இம்பிரஸ் ஆன குஷ்பு அவரின் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டாராம். இதையடுத்து 5 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்த 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 9ந் தேதி குடும்பத்தினர் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உண்டு. திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகி படிப்படியாக அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார் குஷ்பு. அதுமட்டுமின்றி அவ்னி சினிமாஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார்.
மறுபுறம் சுந்தர் சி, குஷ்புவை திருமணம் செய்த பின்னர் அன்பே சிவம், வின்னர், கிரி, கலகலப்பு, அரண்மனை என வரிசையாக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கோலோச்சி வருகிறார். அண்மையில் கூட இவர் இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 மற்றும் மதகஜராஜா ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. அடுத்ததாக அவர் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். இப்படத்தை சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்க உள்ளார் சுந்தர் சி.
55
Khushbu, Sundar C Celebrate Wedding Anniversary in Palani
அண்மையில் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு பூஜை போட்ட சுந்தர் சி தற்போது தன் மனைவியுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்திருக்கிறார். குஷ்பு - சுந்தர் சி இருவருக்கும் திருமணமாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. தங்கள் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகனை தரிசித்துவிட்டு மொட்டை அடித்துள்ளார் சுந்தர் சி. அப்போது அங்கு வந்த பக்தர்கள் சுந்தர் சி மற்றும் குஷ்பு உடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சுந்தர் சி உடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு தன் காதலை கொட்டி வருகிறார் குஷ்பு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.