Kingston vs Dragon Box Office : தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் டிராகன் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வந்த நிலையில், அதற்கு போட்டியாக வெளிவந்த கிங்ஸ்டன் படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த மாதம் 21ந் தேதி திரைக்கு வந்தது. அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. அதன்படி ரிலீஸ் ஆன 7 நாட்களிலேயே ரூ.100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்திய டிராகன் திரைப்படம் தற்போது 125 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது.