
Most Expensive Indian Movies : ஒரு திரைப்படம் வெளியாவதற்குப் பல காரணிகள் உள்ளன. அதில் மிக முக்கியமான பங்கு வகிப்பது பட்ஜெட். பல கோடிகளை செலவழித்து ஒவ்வொரு தயாரிப்பாளரும் திரைப்படங்களை வெளியிடுகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் திரைப்படங்கள் எடுக்கும் பட்ஜெட்டிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. புதிய டிரெண்டுகள், தொழில்நுட்பங்கள், கதை சொல்லும் நுட்பங்கள் மூலம் இந்திய சினிமா வளர்ந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. அதற்கேற்ப பட்ஜெட்டுகளும் மாறும்.
ஆரம்ப காலங்களில் சில லட்சங்களை வைத்து திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் தொழில்நுட்பம், தயாரிப்பு தரம், பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவை வளர்ந்ததால் பட்ஜெட்டும் அதிகரித்தது. இதனால் பெரிய செட்களில் அதிக அளவில் பணம் போட தயாரிப்பாளர்கள் ஆரம்பித்தனர். 1970களில் வெளியான ஷோலே 3 கோடி பட்ஜெட்டில் உருவானது. அது அன்றைய காலகட்டத்தில் மிகவும் அதிக செலவுள்ள இந்திய திரைப்படங்களில் ஒன்றாக மாறியது.
இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் ‘இந்த’ ஊர மையமா வச்சு படம் எடுத்தாலே கன்பார்ம் ஹிட்டு தான்!
பின்னர் எந்திரன், ராவணன், பாகுபலி, 2.0, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி ஆகியவை இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களாக உருவெடுத்தன. தற்போது பல வருடங்களாக அதிக செலவில் எடுக்கப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கோய் மோய் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் வில்லனாகவும், பிரபாஸ் ஹீரோவாகவும் நடித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்த கல்கி படம் தான் முதலிடத்தில் உள்ளது.
அதிக செலவில் எடுக்கப்பட்ட இந்திய படங்கள் லிஸ்ட் இதோ...
1. கல்கி 2898 ஏடி (2024) – 600 கோடி
2. ஆர்ஆர்ஆர் (2022) – 550 கோடி
3. 2.0 (2018) – 400–600 கோடி
4. பாகுபலி 2 (2017) – 250 கோடி
5. பாகுபலி (2015) – 180 கோடி
6. தூம் 3 (2013) – 175 கோடி
7. ராவணன் (2011) – 150 கோடி
8. எந்திரன் (2010) – 132 கோடி
9. மை நேம் இஸ் கான் (2010) – 85 கோடி
10. ப்ளூ (2009) – 80 கோடி
11. கஜினி (2008) – 65 கோடி
12. தசாவதாரம் (2008) – 60 கோடி
13. சிவாஜி தி பாஸ் (2007) – 60 கோடி
14. தாஜ்மஹால் (2005) – 50 கோடி
15. கபி குஷி கபி கம் (2001) – 40 கோடி
16. லகான் (2001) – 25 கோடி
17. ஜீன்ஸ் (1998) – 20 கோடி
18. இந்தியன் (1996) – 15 கோடி
19. திரிமூர்த்தி (1995) – 11 கோடி
20. சாந்தி கிராந்தி (1991) – 10 கோடி
21. அஜூபா (1991) – 8 கோடி
22. ஷான் (1980) – 6 கோடி
23. ஷோலே (1975) – 3 கோடி
24. முகல்-இ-அசம் (1960) – 1.5 கோடி
25. மதர் இந்தியா (1957) – 60 லட்சம்
26. ஜான்சி கி ராணி (1953) – 60 லட்சம்
27. ஆன் (1952) – 35 லட்சம்
38. சந்திரலேகா (1948) – 30 லட்சம்
29. கிஸ்மத் (1943) – 2 லட்சம்
30. சதி சாவித்திரி (1933) – 75000
இதையும் படியுங்கள்... முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல்; அடுத்து எல்லா படமும் தோல்வி? யார் அந்த பியூட்டி?