ஹாலிவுட் ஹீரோயின் போன்ற ஹேர் ஸ்டைலில்... கணவருடன் ஹாட் ரொமான்ஸ் பண்ணும் சுஜா வருணி! லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published | Feb 22, 2023, 5:02 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்கியுள்ள சுஜா வருணி தன்னுடைய காதல் கணவருடன், வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ், சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமாவில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'பிளஸ் டூ' என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுஜாவரணி.   இந்த படத்தை தொடர்ந்து, ஒரு சில படங்களில் இவர் கிளாமர் ஹூரோயினாக நடித்தாலும், இவர் நடித்த படங்கள் வெற்றிபெறாததால், குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அந்த வகையில் வர்ணஜாலம், கஸ்தூரிமான்,மாயாவி, காதல் செய்ய விரும்பு, உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்த இவர்... ஒரு நிலையில் ஐட்டம் டான்சராகவும் சில படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

பல வருடம் கழித்து முதல் மகனை சந்தித்த பிக்பாஸ் தாமரை..! உச்சகட்ட மகிழ்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்!

Tap to resize

தமிழைத் தொடர்ந்து, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளிலும் வாய்ப்பு தேடிய இவருக்கு... கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த இவருக்கு, மிகப்பெரிய திருப்புமுறையாக அமைந்தது 'பிக்பாஸ்' நிகழ்ச்சி. பிக்பாஸ் முதல் சீசனில், வயல் கார்டு  போட்டியாளராக உள்ளே வந்த இவர், 91 வது நாளில் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தாண்டிய காதலர் யார் என்பதை வெளிப்படுத்தியதோடு, திருமணமும் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு அழகிய மகன் ஒருவரும் உள்ளார்.

முயற்சித்தும் நிறைவேறாமல் போன மயில்சாமியின் ஆசை..! வேதனையோடு டெல்லி கணேஷ் பகிர்ந்த தகவல்!

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் சுஜா வருணி அவ்வப்போது, தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்... புதிய ஹேர் ஸ்டைலில், கணவர் சிவகுமாருடன் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!