பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிச்சயமான முகங்களை விட புது முக போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் முக்கியமான போட்டியாளர், கூத்துப்பட்டறை பின்னணியில் இருந்து வந்த தாமரைச்செல்வி.
மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த தாமரை செல்விக்கு, ஏகப்பட்ட கடன்கள் இருந்தும் பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்லாமல், நின்று விளையாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து சாமர்த்தியமாக விளையாடி அசத்தினார்.
பிக்பாஸ் தாமரை செல்வியை, அவரது குடும்பத்தினர் ஏற்கனவே திருமணம் ஆன ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர் மூலம், தாமரைக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், பல வருடங்களுக்கு பின்னர், தாமரை செல்வியின் முதல் மகன் சிவா, அவரை வந்து சந்தித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தாமரை தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.