அனுஷ்காவிற்கு ஆப்பு வைத்த இஞ்சி இடுப்பழகி... ஒரு படத்திற்கு ஆசைப்பட்டு மார்க்கெட்டை இழந்த சோகம்..!

Published : Feb 22, 2023, 03:18 PM IST

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, தற்போது மார்க்கெட் இழந்து தவிப்பதற்கு ஒரு படம் தான் காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

PREV
15
அனுஷ்காவிற்கு ஆப்பு வைத்த இஞ்சி இடுப்பழகி... ஒரு படத்திற்கு ஆசைப்பட்டு மார்க்கெட்டை இழந்த சோகம்..!

நடிகை அனுஷ்கா, மாதவன் நடித்த ரெண்டு திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து அவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்ததால் டோலிவுட் பக்கம் சென்ற அனுஷ்காவுக்கு அங்கு தொட்டதெல்லாம் தங்கமாக அமைந்தது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார். இதையடுத்து தமிழிலும் விஜய், அஜித், சூர்யா என வரிசையாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.

25

இது ஒருபுறம் இருக்க இவர் கதையின் நாயகியாக நடித்த அருந்ததி, பாகமதி போன்ற திரைப்படங்களும் வசூலை வாரிக்குவித்து அனுஷ்காவை சோலோ ஹீரோயினாக உயர்த்தியது. பின்னர் பாகுபலியில் தேவசேனாவாக நடித்து தனது நடிப்பால் ஒட்டுமொத்த இந்தியா சினிமாவையே வியப்பில் ஆழ்த்தி இருந்தார் அனுஷ்கா. அனுஷ்காவுக்கு போட்டியாக இருந்த திரிஷா, நயன்தாரா போன்ற ஹீரோயின்கள் இன்றளவும் மவுசு குறையாமல் நடித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... டைட் உடையில்... திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டி திக்குமுக்காட வைத்த ஷாலு ஷம்மு - டிரெண்டாகும் போட்டோஸ்

35

ஆனால் அனுஷ்கா மட்டும் ஆள் அட்ரஸ்சே காணாமல் ஒதுங்கிவிட்டார். அனுஷ்காவின் மார்க்கெட் திடீரென அதளபாதாளத்திற்கு சென்றதற்கு முக்கிய காரணம் அவரது உடல் எடை அதிகரித்தது தான். நடிகை அனுஷ்கா கடந்த 2015-ம் ஆண்டு இஞ்சி இடுப்பழகி என்கிற திரைப்படத்தில் நடித்தார். பிரகாஷ் கோவெலமுடி என்கிற இயக்குனர் இயக்கி இருந்த இப்படத்தில் அவர் குண்டான தோற்றத்தில் நடிக்கும் படியான காட்சிகளும் இடம்பெற்று இருந்தன.

45

இதற்காக நிஜத்திலேயே குண்டாக வேண்டும் என முடிவெடுத்த அனுஷ்கா, நன்றாக சாப்பிட்டு உடல் எடையை அதிகரித்தார். அந்த படத்திற்காக அனுஷ்கா எடுத்த அந்த ரிஸ்க் தான் தற்போது அவரின் கெரியர் சரிவை சந்தித்ததற்கு முக்கிய காரணம். அதன்பின் பலமுறை உடல் எடையை குறைக்க அனுஷ்கா முயற்சி செய்தும் அவர் எதிர்பார்த்த அளவு குறைக்க முடியவில்லையாம்.

55

சமீபத்தில் கூட ஏ.எல்.விஜய் இயக்க உள்ள ஆக்‌ஷன் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருக்கும அனுஷ்கா, தன்னால் உடல் எடையை இதற்கு மேல் குறைக்க முடியாததால், எடிட் செய்து தன்னை ஸ்லிம்மாக படத்தில் காட்ட வேண்டும் என அக்ரிமெண்ட்டிலேயே குறிப்பிட்டு படக்குழுவினரிடம் கையெழுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இஞ்சி இடுப்பழகி படத்திற்கு ஆசைப்பட்டு அனுஷ்கா மார்க்கெட்டை இழந்து தவித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... வீட்டில் கூட சுதந்திரமா இருக்க முடியல.. திருட்டுத்தனமாக போட்டோ எடுத்து பரப்பியவர்களுக்கு பளார்விட்ட ஆலியா பட்

Read more Photos on
click me!

Recommended Stories