பட்ஜெட் 6 கோடி... வசூல் 100 கோடி! 2025-ல் இந்திய சினிமாவையே வியக்க வைத்த படம் பற்றி தெரியுமா?

Published : Aug 20, 2025, 03:59 PM IST

2025-ம் ஆண்டு பல வெற்றிப் படங்கள் வந்தாலும் கம்மி பட்ஜெட்டில் உருவாகி 100 கோடி கலெக்‌ஷன் அள்ளிய ஒரு சூப்பர் ஹிட் படத்தைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

PREV
14
100 கோடி வசூல் அள்ளிய 6 கோடி பட்ஜெட் படம்

நூறு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் படங்கள் கூட தோல்வியடையும் நிலையில், வெறும் ஆறு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது. அப்படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்திலேயே பல மடங்கு லாபம் ஈட்டியுள்ளது. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. ஆனால் அது ஒரு தமிழ் படம் இல்லை. காந்தாரா போன்ற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த கன்னட திரையுலகம் தான் இந்தப் படத்தையும் கொடுத்திருக்கிறது.

24
கூலி படத்துக்கே டஃப் கொடுக்கும் அந்தப்படம் எது?

ராஜ் பி. ஷெட்டி மற்றும் அவரது குழு தயாரித்து, ஜெ.பி. துமினாடு நடித்து, கதை எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்தின் பெயர் Su From So. இப்படம் ரசிகர்களைச் சிரிக்க வைத்தபடியே வசூலையும் குவித்து வருகிறது. ஜெ.பி.துமினாடு இயக்கியுள்ள Su From So , ஒரு ஊரில் நடக்கும் கதையாகும். ஒரு வீட்டில் ஏற்படும் பிரச்சினையை அந்த ஊரே எப்படிச் சமாளிக்கிறது என்பதே கதை. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வரும் Su From So திரைப்படம் ரசிகர்களாலேயே விளம்பரப்படுத்தப்படுகிறது. அதனால் பெரிய விளம்பரங்கள் இல்லாமலேயே திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன. ஜூலை 25 அன்று வெளியான இந்தப் படம் கர்நாடகாவில் கூலி படத்துக்கே டஃப் கொடுத்து வருகிறது.

34
கம்மி பட்ஜெட்டில் உருவான Su From So

Su From So படத்தில் அசோக்காக நடித்துள்ள ஜெ.பி.துமினாடுவே இப்படத்தின் இயக்குநர். தயாரிப்பாளர் ராஜ் பி. ஷெட்டிக்கு குறைந்த செலவில் பிரம்மாண்டமாகப் படம் எடுக்கத் தெரியும் என்று ஒரு பேட்டியில் துமினாடு கூறியுள்ளார். அதைப்போலவே இப்படத்தையும் குறைந்த செலவில் மிக பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார். இப்படத்தில் ரவி அண்ணாவாக ஷனீல் கெளதம் நடித்துள்ளார். அசோக்காக ஜெ.பி.துமினாடு, சுவாமியாக ராஜ் பி. ஷெட்டி, பானுவாக சந்தியா, சந்திரனாக பிரகாஷ் துமினாடு, நளினியின் கணவராக புஷ்பராஜ் போளார், சதீஷாக தீபக் ராய் பனஜே ஆகியோர் நடித்துள்ளனர்.

44
100 கோடி அள்ளிய Su From So

வெறும் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட Su From So திரைப்படம் 100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை படைத்துள்ளது. கம்மி பட்ஜெட்டில் அதிக வசூல் அள்ளிய கன்னட படம் என்கிற சாதனையையும் இப்படம் படைத்திருக்கிறது. இப்படம் தற்போது 120 கோடிக்கு மேல் வசூலித்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் லாபம் கிடைத்துள்ளது. தமிழில் டூரிஸ்ட் ஃபேமிலி போல் கன்னடத்தில் Su From So திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories