விஜய் டிவியில் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ள பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் லீக் ஆகி உள்ளது.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சி கடந்த 8 ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முதன்முதலில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன்பின்னர் சினிமாவில் பிசியானதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகினார் கமல்ஹாசன். இதையடுத்து அந்நிகழ்ச்சியின் 8-வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அந்த சீசனுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
25
பிக் பாஸ் சீசன் 9 எப்போது ஆரம்பம்?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளது. வழக்கம்போல் இந்த சீசனும் பல்வேறு புதுமைகளுடன் ஆரம்பமாக உள்ளது. இந்த சீசனிற்கான புரோமோ ஷூட் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதன்பின்னர் இந்நிகழ்ச்சி பற்றிய ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனைப் போல் இந்த சீசனிலும் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
35
பிக் பாஸ் போட்டியாளர் லிஸ்ட்
இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளது யார்.. யார் என்கிற தகவல் கசிந்துள்ளது. அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ள ஷபானா மற்றும் உமைர் ஆகியோர், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்க உள்ளார்களாம். இவர்கள் இருவருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமே ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், தற்போது பிக் பாஸில் எண்ட்ரி கொடுத்தால் மிகவும் டஃப் ஆன போட்டியாளர்களாக இவர்கள் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் அதிகளவில் கலந்துகொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் நான்கு விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் களமிறங்க உள்ளார்களாம். அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடு சீரியலில் நடித்த வினோத் பாபு இந்த ஆண்டு பிக் பாஸில் கலந்துகொள்ள உள்ளாராம். இதுதவிர மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் ஃபேமஸ் ஆன சீரியல் நடிகர் புவி அரசுவும் இந்த ஆண்டு பிக்பாஸில் எண்ட்ரி கொடுக்க உள்ளாராம். இதுதவிர பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் நேஹா மேனன் மற்றும் அக்ஷிதா அசோக் ஆகியோர் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார்களாம்.
55
லீக்கான போட்டியாளர் லிஸ்ட்
இதுதவிர தமிழ் சினிமாவில் காமெடியனாக பல்வேறு படங்களில் கலக்கி வரும் பால சரவணனும் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளாராம். இதுதவிர இன்ஸ்டா பிரபலமும், புகழ்பெற்ற விஜேவுமான பார்வதியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் மற்றும் நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.