சன் டிவியில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டு சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் தான் ஆடுகளம். தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் டெல்னா டேவிஸ் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த சத்யா மற்றும் அர்ஜுனின் திருமண எபிசோடு தான் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த திருமண எபிசோடில் செல்வ நாயகி பற்றிய உண்மையை போட்டுடைத்துள்ளார் சத்யா. அவர் செய்துள்ள சூழ்ச்சிகளையும் அனைவரின் முன்னிலையிலும் கூறி இருக்கிறார் சத்யா. இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
ஆடுகளம் சீரியல் இன்றைய எபிசோடு
தன்னுடைய அக்கா தேவி உயிரோடு தான் இருக்கிறாள் என்று சத்யா கூறியதைக் கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். அதுமட்டுமின்றி தன்னுடைய அப்பா - அம்மா, தாத்தா - பாட்டி ஆகியோரையும் திருமணத்தில் அறிமுகப்படுத்தி அதிர்ச்சி கொடுக்கிறார். என்னுடைய அக்கா இறந்துவிட்டாள் என எல்லாரும் நினைச்சிட்டு இருந்தீங்க. ஆனா என் அக்கா சாகல, உயிரோடு தான் இருக்காங்க. அவ எப்படி உயிரோடு வந்தாள் என்பதை நான் அப்புறமா விளக்கமா சொல்லுகிறேன் என சொல்லும் சத்யா, ஆனால் இதற்கெல்லாம் காரணம் இந்த செல்வநாயகி மேடம் தான் என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார்.
34
செல்வநாயகி பற்றிய உண்மையை உடைக்கும் சத்யா
இவரால் தான் என்னுடைய அக்காவுக்கு இந்த நிலைமை வந்தது என சத்யா சொன்னதும், என்ன முட்டாள்தனமா பேசிட்டு இருக்க என செல்வநாயகி பதிலடி கொடுக்கிறார். பின்னர் சத்யாவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார் அர்ஜுன். உனக்கு என்ன ஆச்சு? என்ன உளறிகிட்டு இருக்க? என்னோட அம்மா என்ன தவறு செய்தார்? அவங்கள ஏன் இந்த விஷயத்தில் இழுக்குற? என கேட்கிறார் அர்ஜுன். இதற்கு பதிலளித்த சத்யா, உங்க அம்மா உங்களுக்கு தெய்வம், ஆனா என்னோட அக்காவுக்கு எமனாக மாறப்பார்த்தாங்க என சொல்கிறார். உடனே கோபமடையும் செல்வநாயகி, சத்யா கண்டபடி உளறாத... நான் யார்னு தெரியாம பேசிட்டு இருக்க என எச்சரிக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் சத்யா, நீங்க யார்னு தெரிஞ்சு தான் பேசிக்கிட்டு இருக்கேன் என சொல்கிறார். உடனே அபி தன்னுடைய தேவியை தனக்கு காட்டுமாறு கேட்கிறார். அப்போது சத்யா பொய் சொல்வதாக செல்வநாயகி சொல்ல, உடனே அங்கிருந்த ஆதிரையிடம், தேவியின் முகத்தில் இருக்கும் மாஸ்கை கழட்ட சொல்கிறார் சத்யா. தன் தாயை அவமானப்படுத்தியதால் ஆத்திரமடையும் அர்ஜுன், என்னால் இனிமே உன்னை ஏத்துக்க முடியாது என திட்டவட்டமாக கூறுகிறார். இதனால் சத்யா - அர்ஜுன் திருமணம் நின்றுபோனதா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.