விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷை வேறு ஸ்கூலில் சேர்த்த ரோகிணியிடம் லட்சுமி சண்டைபோடுகிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷை வேறு ஸ்கூலில் சேர்க்கும் ரோகிணி, அவனை அங்கிருக்கும் ஹாஸ்டலில் தங்க வைக்கிறார். அம்மாவை பிரிய முடியாமல் பாசத்தில் கண்ணீர்விட்டு அழும் கிரீஷை விடாப்பிடியாக பள்ளியில் சேர்த்துவிட்டு வெளியே வருகிறார் ரோகிணி. அப்போது லட்சுமி அந்த ஸ்கூலின் வாசலில் நிற்கிறார். அவர் ரோகிணியிடம் சண்டை போடுகிறார். ஏன் கிரீஷை இந்த ஸ்கூலில் வந்து சேர்த்தாய், என கேட்பதோடு, தயவு செய்து அவனை தன்னிடமே அழைத்து செல்வதாக கூறுகிறார். இதனை ஏற்க மறுக்கும் ரோகிணி, கிரீஷை மாதத்திற்கு ஒரு முறை வந்து பார்த்துவிட்டு போகுமாறு கூறுகிறார்.
24
கிரீஷின் பாட்டியை கண்டுபிடித்த மீனா
இதையடுத்து அங்கிருந்து பஸ் ஏறி செல்ல காத்திருக்கும் லட்சுமியை, திடீரென சந்திக்கும் மீனா, அவரிடம் சென்று விசாரிக்கிறார். ஏன் சொல்லாமல் சென்றீர்கள் என்று கேட்க, அதற்கு அவர் நான் பெரிய பாவி உங்களிடம் நிறைய விஷயத்தை மறைத்துவிட்டேன். நீங்க என்மீதும், கிரீஷ் மீதும் காட்டிய பாசத்தை என்றைக்கும் மறைக்க மாட்டேன். கிரீஷ் அவன் அம்மாவுடன் சேர வேண்டும் என்பதற்காக தான் நான் யாரிடமும் சொல்லாமல் சென்றேன் என சொல்கிறார். இதைக்கேட்டு குழம்பிப் போகும் மீனா, கிரீஷுடைய அம்மா யாரு? அவங்க எப்போது துபாயில் இருந்து வந்தா? என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்கிறார்.
34
மீனா உடைக்கும் உண்மை
பின்னர் எந்த உண்மையையும் சொல்லாத லட்சுமி, நான் பாவி என்னை மன்னித்துவிடு என சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறி சென்றுவிடுகிறார். இதனால் எது உண்மை என்பது தெரியாமல் குழம்பிப் போகிறார் மீனா. பின்னர் வீட்டுக்கு வரும் மீனா, முத்துவிடம் வந்து, அன்றைக்கு அத்தை சொன்னது உண்மை தான், கிரீஷ் பாட்டியை பார்த்ததாக அத்தை சொன்னது உண்மை தான், நானும் அவரை இன்று பார்த்தேன். அப்போது அவரிடம் பேசினேன் என சொல்கிறார். இதைக்கேட்டதும் பதற்றம் அடைகிறார் ரோகிணி. தற்போது கிரீஷ் அவனுடைய அம்மாவுடன் தான் இருக்கிறான் என்கிற விஷயத்தையும் கூறுகிறார் மீனா.
இதனால் அதிர்ச்சி அடையும் ரோகிணி, தன்னுடைய அம்மா லட்சுமி வேறு என்னென்னெ உலறினார் என்பது தெரியாமல் குழம்பி நிற்கிறார். மறுபுறம் கிரீஷின் அம்மா யார் என்பதை தெரிந்துகொள்ள முத்து - மீனா ஆகியோர் முனைப்பு காட்டுகின்றனர். இதன்பின் என்ன ஆனது? கிரீஷின் அம்மா பற்றிய உண்மை முத்து - மீனாவுக்கு தெரிய வந்ததா? ரோகிணி தான் கிரீஷின் அம்மா என்பதை அவர்கள் இருவரும் கண்டுபிடிப்பார்களா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தான் தெரியவரும்.