எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை ஜெயிலுக்கு அனுப்ப நினைத்த ஆதி குணசேகரனின் பிளான் சொதப்பியது. இதையடுத்து ஜாமினில் வெளியே வந்த ஜனனி, நேராக வீட்டுக்கு வந்து, ஆதி குணசேகருடன் சரி சமமாக அமர்ந்து அவருக்கு சவால் விட்டுள்ளார். இதுவரை நாங்கள் காட்டிய கரிசனத்தால் பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பித்த நீங்க, இந்த முறை என்ன செஞ்சாலும் தப்ப முடியாது. உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பேன் என்று சவால் விட்டுள்ளார் ஜனனி. பதிலுக்கு ஆதி குணசேகரனும் உன்னை இந்த வீட்டை விட்டு விரட்டுவேன் என பதிலடி கொடுத்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
ஆதி குணசேகரனை எச்சரித்த தர்ஷன்
வீட்டில் இருந்து தன் அம்மா ஈஸ்வரியை பார்க்க கிளம்புகிறார் தர்ஷன். அப்போது அவரை செல்ல விடாமல் தடுக்கிறார் ஆதி குணசேகரன். இதனால் கடுப்பாகும் தர்ஷன், என்னுடைய அம்மாவை நான் பார்க்க செல்வதை தடுத்தால் இந்த கல்யாணம் நடக்காது என எச்சரிக்கிறார். இதையடுத்து வேறு வழியின்றி தர்ஷனை ஆஸ்பத்திரிக்கு செல்ல அனுமதிக்கிறார் ஆதி குணசேகரன். மறுபுறம் ஜீவானந்தம், பார்கவியிடம் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்வதாக கூறுகிறார். ஆனால் பார்கவியோ ஈஸ்வரி குணமடைவதை பார்க்காமல் செல்ல மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார்.
34
சப்போர்ட்டுக்கு வந்த சக்தி
பின்னர் வீட்டில் ஈஸ்வரி அடிபட்டு கிடந்த அறையில் ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகியோர் அமர்ந்திருக்க, அங்கு வரும் சக்தியிடம், உன்னை நான் கெஞ்சி கேட்கிறேன் தயவு செஞ்சு எங்க பக்கம் நில்லு என சொல்கிறார் ரேணுகா. இந்த விஷயத்தில் நான் உங்க கூட தான் நிற்பேன் என்று திட்டவட்டமாக கூறுகிறார் சக்தி. இதைக்கேட்டு ஜனனி மற்றும் நந்தினி ஆறுதல் அடைகின்றனர். பின்னர் ஆஸ்பத்தியில் இருக்கும் தர்ஷனுக்கு போன் போட்டு பேசுகிறார் ஜனனி. அம்மாவுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்கனும்னா இவங்களை தாண்டி நம்ம யோசிக்க வேண்டும் என சொல்கிறார்.
ஏற்கனவே ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய வீடியோ ஆதாரம் அறிவுக்கரசியிடம் சிக்கிய நிலையில், அதை ஜனனி எப்படியாவது கண்டுபிடிப்பாரா? ஒருவேளை கண்டுபிடித்தால், அதன்பின் ஆதி குணசேகரனின் ஆட்டம் அடங்கும் என்பது மட்டும் உறுதி. ஜனனிக்கும் ஆதி குணசேகரனுக்கும் இடையே நடக்கும் இந்த இறுதி யுத்தத்தில் வெல்லப் போவது யார்? பார்கவி மற்றும் ஜீவானந்தத்தை தேடி அலையும் தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தார்களா? என்பதற்கான விடை இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.