விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும், ஜாலியான ஒரு சமையல் நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி எனலாம். கடந்த ஆண்டு, குக் வித் கோமாளி சீசன் 3 நிறைவடைந்த நிலையில், ஜனவரி 28 ஆம் தேதி முதல் 'குக் வித் கோமாளி' சீசன் 4 துவங்க உள்ளது.
cooku with comali 3
மேலும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக... வழக்கம் போல் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் உள்ளனர். தொகுப்பாளராக ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்க உள்ளார்.
இவர்களை தொடர்ந்து, குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க உள்ளவர்களின், முழு தகவல் தற்போது வெளியாகியுளளது அதன் படி, தமிழில் மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன் போன்ற படங்களில் நடித்துள்ள சிருஷ்டி டாங்கே பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வலிமை படத்தில், அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்த ராஜ் ஐயப்பா... தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுக்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்குகிறார்.
நடிகராகவும், இயக்குனராகவும் அறியப்படும் கிஷோர் ராஜ்குமார் 'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில், ரசனையோடு படம் எடுக்க மட்டும் அல்ல, சமைக்கவும் தெரியும் என மற்ற போட்டியாளர்களுக்கு சவால் விட வருகிறார்.
அதே போல் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தன்னுடைய துள்ளலான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்து, சில படங்களில் ஹீரோயினாக நடித்தது மட்டும் இன்றி, பட வாய்ப்புக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ஷெரின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் களமிறங்குகிறார்.
மேலும் திருமணத்திற்கு பின்னர் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த கவர்ச்சி நடிகை விசித்ரா, தற்போது சில சீரியல்களில் நடித்து வந்தாலும், திரைப்பட வாய்ப்பை கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
கடைசி போட்டியாளர் யார் என்றால், கண்டிப்பாக நம்மால் நம்ப முடியாது. ஆமாம்.... பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, பிசியாக ஒரு பக்கம் பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வந்தாலும், ஒரு என்டர்டேயின்மெண்டுக்காக இந்த நிகழ்ச்சியை குக்காக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை யார் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்து அதிகார பூர்வ தகவல்கள் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.