Shah Rukh Khan Pathaan
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் நேற்று வெளியான ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'பதான்' முதல் நாளிலேயே, இந்தியாவில் மட்டும் 54 கோடி வசூல் செய்த நிலையில், உலக அளவில் 100 கோடி வசூலித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ஷாருக்கான் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக, கடந்த 2018 ஆம் ஆண்டு 'ஜீரோ' திரைப்படம் வெளியான நிலையில், இந்த படத்தை தொடர்ந்து... கடந்த நான்கு ஆண்டுகளாக ஷாருக்கான் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் பாலிவுட் பாஷாவான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில், ரசிகர்களின் மிகப்பெரிய காத்திருப்புக்கு தீனி போடும் வகையில் ஜனவரி 25 (நேற்று) 'பதான்' திரைப்படம் வெளியானது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மனோபாலா.! என்ன ஆச்சு? திரையுலகில் பரபரப்பு!
இந்த படத்தை ஷாருக்கானின் ரசிகர்கள் வழக்கம்போல், ஆட்டம், பாட்டம், என திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் அதிகாலை முதலே பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
'பதான்' திரைப்படம் வெளியான முதல் நாளே, இந்திய அளவில் சுமார் 54 கோடி வசூல் செய்தகாக கூறப்பட்ட நிலையில், உலக அளவில் முதல் நாளிலேயே 100 கோடி வசூல் செய்த முதல் இந்தி திரைப்படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். வில்லனாக ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். சிறப்பு வேடத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். இப்படம் டிக்கெட் முன்பதிவிலும் KGF படத்தின் சாதனையை முறியடித்துள்ளது குறிபிடித்தக்கது.