டோலிவுட் திரையுலகில், 35 வயதை கடந்தும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்களில் ஹீரோவாக இருந்து வந்த ஷர்வானந்த் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சில தகவல்கள் பரவி வந்த நிலையில், ஷர்வானந்தின் நிச்சயதார்த்தம் குடியரசு தினமான இன்று நடைபெற்றுள்ளது.
குறிப்பாக ஷர்வானந்தின் சிறு வயது நண்பரும், டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகருமான ராம் சரண் தன்னுடைய மனைவி உபாசனாவுடன், இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு ஷர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியை வாழ்த்தியுள்ளனர்.
இவர்களின் திருமணத்தை உறுதி படுத்தும் விதமாக, இன்று காலை ஷர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி ஜோடிக்கு நிச்சயம் முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் இவர்களின் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டாக திருமணம் செய்து கொண்டாலும், ஷர்வானந்த் ஒரு வலுவான பின்னணி கொண்ட பெண்ணை திருமணம் செய்யப் போகிறார் என ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்