விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக திருமணமாகி குழந்தை பெற்ற பெண்களாலும்.. நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாக்கியலட்சுமி'.
மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்த வருகிறார். இந்த கதாபாத்திரம் பாக்கியாவின் கணவர் கோபியின் இரண்டாவது மனைவியாகும். மேலும் சில வில்லத்தனத்தோடு இந்த கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இவரைத் தொடர்ந்து இந்த சீரியலில் நடித்து வந்தவர் தான் பிக்பாஸ் பிரபலமும், சில சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள ரேஷ்மா. இதுவரை எத்தனையோ சீரியல்கள் இவர் நடித்திருந்தாலும் ரேஷ்மாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது 'பாக்கிய லட்சுமி' தொடர் தான். இந்த சீரியல் ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
இந்நிலையில் ரேஷ்மாவுக்கு பிரபல தனியார் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து ரேஷ்மா எந்த ஒரு உறுதியான தகவலையும் வெளியிட வெளியிடவில்லை என்றாலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயலை தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய கன்னட மேயர்.! செம்ம குஷியான ரசிகர்கள்!
மேலும் இந்த வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரத்திற்கு, புதிய ராதிகாவாக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகை வனிதா விஜயகுமாரை நடிக்க வைக்க, சீரியல் குழு முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தற்போது பரபரப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.