வீரபாண்டிய கட்டபொம்மன்:
பாஞ்சாலங்குறிச்சியில் மன்னன், வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து 18 ம் நூற்றாண்டின் கதையை நம் கண் முன் நிறுத்திய திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன். இதில் நடிகர் சிவாஜி கணேசன், வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே உயிர் கொடுத்திருந்தார். நம் மண்ணையே பிடித்து கொண்டு, சர்வாதிகாரம் செய்து வந்த ஆங்கிலேயருக்கு ஏன் நாம் வரி கட்ட வேண்டும் என்று, எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த உத்தமனை தேச உணர்வோடு நினைவில் கொள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
கப்பலோட்டியில் தமிழன்:
சுதந்திரத்திற்காக போராடிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் கதை தான் இந்த 'கப்பலோட்டிய தமிழன்'. மேலும் நம் தேசத்திற்காக போராடிய சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன், போன்றவர்கள் பற்றும் நாம் தெரிந்து கொள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம். இப்படத்தில் ஆங்கிலேயர்களால் சுதந்திரத்திற்கு போராடியவர்களை இழைக்கப்பட்ட அநீதிகள், சுதந்திரத்தை நமக்கு பெற்று தர அவர்கள் பட்ட கஷ்டங்களையும் காண முடியும். இப்படத்தை பார்த்தல், கண்கள் கலங்கி தேச உணர்வில் நம் ரத்தம் கொதிக்கும்.
ஷாருக்கானின் 'பதான்' குறித்து... உலகநாயகன் போட்ட நச் ட்வீட்! என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?
ஜெய்ஹிந்த் 2:
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்ஹிந்த். இப்படம் நம் நாட்டில் உள்ள கல்வி முறையில் சிக்கல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. மேலும் கல்வி ஒவ்வொரு குழந்தையின் உரிமை, என்றும் சமத்துவமின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளை இப்படம், தேச பற்றுடன் பேசியது.
Aravind Swamy
ரோஜா:
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியான திரைப்படம் ரோஜா. திருமணமான தம்பதி காஷ்மீருக்கு செல்லும் நிலையில், சில பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்படும் அரவிந்த் சாமிக்கு தீவிரவாதிகளால் என்ன நேர்கிறது? என்பதை மிகவும் விறுவிறுப்பாக கூறிய திரைப்படம் ரோஜா. தீவிரவாதிகள் இந்திய கொடியை எரிக்க முயலும் போது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தேச பற்றை வெளிப்படுத்தும் விதம் எத்தனை முறை இப்படத்தை நாம் பார்த்தாலும் புல்லரிக்க செய்யும்.
Hansika:கல்யாணத்திற்கு பிறகும் கவர்ச்சி கும்மாளம்..! ஸ்ட்ராப்லெஸ் உடையில் சூடேற்றிய ஹன்சிகாவின் ஹாட் போட்டோஸ்!
இந்தியன்:
சமூகத்தில் நடக்கும் ஊழல்களை நிரந்தரமாக அழிக்க நினைக்கும் இந்திய போராட்ட வீரர் சேனாதிபதி என்பவரை சுற்றி நகரும் சுவாரஸ்யமான கதை தான் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில், தவறு செய்வது தன் மகனாக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும் என நினைத்து, சேனாதிபதி கமல் தண்டிக்கும் காட்சிகளும், சுதந்திரத்திற்காக போராடும் ஃபிளாஷ் பேக் என தேச பக்தியுடன் இப்படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தின் இரண்டாம் பாகம் கமல் நடிப்பில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பாம்பே:
மணிரத்னம் - அரவிந்த்சாமி காம்பினேஷனில் வெளியான மற்றொரு தேசப்பற்று மிக்க திரைப்படம் தான் பாம்பே. ஒரு இந்து பையனும், முஸ்லிம் பெண்ணும் காதலித்து பெற்றோரை மீறி திருமண வாழ்க்கையில் இணைகிறார்கள். இரு பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவர்கள், மும்பையில் நடக்கும் கலவரத்தில் சிக்குகிறார்கள். கலவரத்தை முடிந்த பின்னர், நாம் சாதி, மதத்தால் வேறுபட்டிருந்தாலும் அனைவரும் இந்தியர்கள் என்பதை எடுத்து கூறும் விதமான காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக கலவரம் முடிந்த பிறகு மத வேறுபாடு இன்றி மக்கள் ஒருவருக்கொருவர் கட்டிபிடித்து தங்களுடைய பாசத்தை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் பார்க்கும்போது கண்களை குளமாக்கும் எந்த மதமாக இருந்தாலும் ஜாதியாக இருந்தாலும் மனிதர்கள் என்பது ஒன்றுதான் என தேச உணர்வை ஊட்டிய திரைப்படம் பம்பாய் அமைந்தது.
பிக்பாஸ் ஆயிஷாவிற்கு விரைவில் திருமணமா? வித்தியாசமாக காதலரை அறிமுகம் செய்த நடிகை! வைரலாகும் புகைப்படம்!
துப்பாக்கி:
விஜய் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி' திரைப்படம், ஸ்லீப்பர் செல் பயங்கரவாதிகளை அழிக்க ரகசிய உளவுத்துறை அதிகாரியாக இருக்கும் தளபதி விஜய், வருகிறார். அவருக்கு எப்படிப்பட்ட பிரச்சனைகள் வருகிறது, அதனை எப்படி தற்போதைய னொழில்நுட்பத்தோடு எதிர்கொள்கிறார் என்பது போன்ற காட்சிகள் பார்பவர்களையே பிரமிக்க செய்தது. குடியரசு நாளில் பார்க்க வேண்டிய ஃபீல் குட் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
ஹேராம்;
இந்திய பாக்கித்தான் பிரிவினையின்போது கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறைக்கு தன் மனைவி கொல்லப்படுகிறார். இசுலாமியர்களுக்கு அளவுக்கு அதிகமாக இடம் கொடுத்த மகாத்மா காந்தியே இதற்கு காரணம் என்று இந்துத்துவ குழுக்களால் சாக்கேத் ராம் மூளைச் சலவை செய்யப்படுகிறார். மனைவியை இழந்த துயரமும், பழிவாங்கும் உணர்வும், மூளை சலவையும் சேர்ந்து இசுலாமியர்களையும், காந்தியையும் வெறுக்கத்தொடங்குகிறார். காந்தியையே கொள்ள நினைக்கும் சாக்கேத் ராம் வாழ்க்கையில் மீண்டும் தன்னுடைய நண்பனை சந்திக்க நேர்கிறது? ஒரு நிலையில் காந்தி நம் தேச தந்தை என்பதை அறிந்து கொள்ளும் சாக்கேத் ராம் அவரிடம் மன்னிப்பு கேட்ட செல்லும் நடக்கும் எதிர்பாராத சம்பவமும், பின்னர் சாக்கேத் ராம் எடுக்கும் முடிவு தான் இப்படத்தை கதை. தேச உணர்வுடன் இப்படத்தை இயக்கி நடித்திருந்தார் நடிகர் கமல் ஹாசன்.
எனக்கு நேர்ந்தது என் வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு நடக்க கூடாது! தி கிரேட் இந்தியன் கிச்சன் பட விழாவில் சுஹாசினி
பாரதி, காமராஜ், காந்தி,
சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றாலே நாம் அனைவருடைய நினைவிற்கும் முதலில் வருவது மகாத்மா காந்தி. காமராஜ். பாரதியார் போன்றவர்கள் தான். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும் எப்போதும் நம் தேச உணர்வை அதிகரிக்கச் செய்யும் படங்களாகவே உள்ளது.