சுனில் ஷெட்டி தனது மகள் மற்றும் மருமகனுக்கு மிக விலையுயர்ந்த பரிசை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீட்டை பரிசாக கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
சுனில் ஷெட்டியின் மற்றொரு நண்பரான ஜாக்கி ஷெராப்பும் அதியாவுக்கு விலைமதிப்பற்ற பரிசை வழங்கியுள்ளார். அவருக்கு சோபார்ட் கைக்கடிகாரங்களை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சுவிஸ் சொகுசு கடிகாரங்களின் விலை சுமார் 30 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
அதியாவும் கே.எல்.ராகுலும் தற்போது அவரவர் பணிகளில் பிஸியாக உள்ளனர். இதனால், ஐபிஎல் முடிந்த பிறகு மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்றும், இதில் சுமார் 3,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.