மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக, சுந்தர் .சி இயக்கத்தில் வெளியான 'ஆக்சன்' மற்றும் தனுஷுக்கு ஜோடியாக கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது என்றால் அது 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தான்.
இதைத்தொடர்ந்து குஸ்தி வீராங்கனையாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளின் டூப் போடாமல் நடித்து, ரசிகர்களை மிரள வைத்திருந்தார்.
மாடர்ன் உடையில், கவர்ச்சி பொங்க இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை திரையுலகில் அதிக கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி இனி கவர்ச்சி வேடங்களிலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.