தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயின் அவதாரம் எடுத்த ஸ்ரீதேவி முன்னணி நடிகையாக உயர்ந்தவர். பொதுவாக தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகைகள், வட இந்தியவில் பட வாய்ப்பை கைப்பற்றி நடிப்பது, குதிரை கொம்பாக இருந்த காலத்திலேயே, அசால்டாக பாலிவுட் திரையுலகில் நுழைந்து, லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தையும் தனதாக்கி கொண்டார் ஸ்ரீதேவி.
திருமணத்திற்கு பின் தன்னுடைய நடிப்புக்கு சிறு இடைவெளி விட்ட ஸ்ரீதேவி, பின்னர் சில சீரியல்கள் மற்றும் இங்கிலிஷ் விங்கிலீஷ், புலி போன்ற படங்களிலும் நடித்தார். இவரின் மகள் நடிகையாக அறிமுகமாகி திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில், துபாய்க்கு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு சென்றிருந்தபோது... பாத் டப்பில் மூழ்கி கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அதே போல் ஸ்ரீதேவியின் நினைவை தூண்டும் விதமாக அவரின் மூத்த மகள், திரையுலகில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதோடு, ஸ்ரீதேவியின் புடவையை அணிந்து போட்டோ ஷூட், அவர் வரைந்த ஓவியங்கள் ,மற்றும் அவரின் நினைவு பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதாவது ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு குடி பழக்கம் இருந்ததாம். தினமும் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்த இவர், தன்னுடைய மகள் ஸ்ரீதேவிக்கும் தூங்குவதற்காக ஒயின் ஊற்றி கொடுத்து அவரையும் இந்த பாழாய் போன பழக்கத்திற்கு ஆளாக்கிவிட்டதாகவும், இதனால் பிற்காலத்தில் அவரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.