2023-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் ரிலீசாகி வருகின்றன. இந்த ஆண்டு இதுவரை 4 மாதங்கள் முடிவடைய உள்ளன. அதற்குள் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்த 4 படங்கள் ரிலீசாகிவிட்டன. ஜனவரி மாதம் அவர் நடித்த கல்யாணம் கமநீயம் என்கிற தெலுங்கு திரைப்படம் ரிலீஸ் ஆனது. அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.