சூப்பர்ஸ்டார் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட பெருந்தொகையை சம்பளமாக கேட்ட ஷ்ரேயா - ஆடிப்போன படக்குழு

First Published | Apr 24, 2023, 2:44 PM IST

நடிகை ஷ்ரேயாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், தற்போது பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட பெருந்தொகையை சம்பளமாக கேட்டுள்ளாராம்.

Shriya Saran

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷ்ரேயா. இவர் ரஜினியுடன் சிவாஜி, விஜய்க்கு ஜோடியாக அழகிய தமிழ்மகன், தனுஷுடன் குட்டி, ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை போன்ற படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆண்ட்ரூ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரேயாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பின்னர் சினிமாவில் படு பிசியாக நடிக்கத் தொடங்கியுள்ள நடிகை ஷ்ரேயா 40 வயதாகியும் கவர்ச்சியை கைவிடாமில், தொடர்ந்து விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். இதன் பலனாக தற்போது அவருக்கு ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்தது. அது என்னவென்றால் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஐட்டம் டான்ஸ் ஆடும் வாய்ப்பு.

இதையும் படியுங்கள்... Exclusive : புள்ளிங்கோ லுக்கில் விக்ரம்... மேட்சிங் மேட்சிங் உடையில் வந்து மும்பையை கலக்கிய PS2 படக்குழு

Tap to resize

இதற்கு ஓகே சொன்ன நடிகை ஷ்ரேயா, சிரஞ்சீவி உடன் கவர்ச்சி பொங்க நடனமாட கேட்ட சம்பளம் தான் தயாரிப்பாளரை சற்று ஜெர்க் ஆக்கியதாம். ஹீரோயினாக நடிப்பதற்கே லட்சங்களில் சம்பளம் வாங்கி வரும் ஷ்ரேயா, ஐட்டம் டான்ஸ் ஆட ரூ.1 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். இதனைக் கேட்டு ஆடிப்போன படக்குழு, அவரை ஆட வைக்கலாமா அல்லது வேறு நடிகையை தேர்வு செய்யலாமா என்கிற குழப்பத்தில் உள்ளார்களாம்.

சிரஞ்சீவி நடித்து வரும் போலா சங்கர் திரைப்படத்தில் ஆட தான் ஷ்ரேயா இவ்வளவு பெரிய தொகையை கேட்டிருக்கிறாராம். போலா சங்கர் திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இதில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மறுபுறம் அவருக்கு ஜோடியாக தமன்னா இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... ராஜமவுலி மட்டும் இல்லேனா... பொன்னியின் செல்வன் வந்திருக்காது - மணிரத்னம் வெளியிட்ட ஷாக்கிங் சீக்ரெட்

Latest Videos

click me!