பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா ஆகியோர் மும்பைக்கு சென்றுள்ளனர்.
மும்பையில் நடைபெற உள்ள புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ஜெயம் ரவி ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட்டும், வெள்ளை நிற ஓவர் கோர்ட்டும் அணிந்து வந்திருந்தார்.
நடிகர் சீயான் விக்ரம், வெள்ளை நிற பேண்ட் மற்றும் ஸ்லீவ் லெஸ் பணியன் அணிந்துகொண்டு புள்ளிங்கோ கெட் அப்பில் வந்து அனைவரையும் கவர்ந்தார்.
பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, மாடர்ன் உடையணிந்து வந்து ஸ்டைலாக போஸும் கொடுத்துள்ளார்.
வந்தியத்தேவனாக கலக்கிய நடிகர் கார்த்தி, கருப்பு ஜீன்ஸ், கருப்பு டீசர்ட் மற்றும் கருப்பு நிற ஓவர்கோர்ட் என ஸ்மார்ட் லுக்கில் வந்து கலக்கலாக போஸும் கொடுத்துள்ளார்.
நடிகர் சீயான் விக்ரம் நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சோபிதா துலிபாலா உடன் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட கேண்டிக் கிளிக் இது.
பொன்னியின் செல்வனில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி என்கிற கேரக்டரில் நடித்திருந்த நடிகை சோபிதா துலிபாலா மாடர்ன் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் உள்ளார்.