ராஜமவுலி மட்டும் இல்லேனா... பொன்னியின் செல்வன் வந்திருக்காது - மணிரத்னம் வெளியிட்ட ஷாக்கிங் சீக்ரெட்

Published : Apr 24, 2023, 01:19 PM ISTUpdated : Apr 24, 2023, 01:26 PM IST

ஐதராபாத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணிரத்னம், இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்தார்.

PREV
14
ராஜமவுலி மட்டும் இல்லேனா... பொன்னியின் செல்வன் வந்திருக்காது - மணிரத்னம் வெளியிட்ட ஷாக்கிங் சீக்ரெட்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வனுக்கு திரை வடிவம் கொடுக்க எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் தொடங்கி தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு ஜாம்பவான்கள் முயன்ற போதிலும், அது நிறைவேற்ற முடியாமல் போனது. இறுதியாக இதனை ஒரு சவாலாக ஏற்ற இயக்குனர் மணிரத்னம், தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தை நனவாக்கினார். அப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.

24

லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள அப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி அப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அதற்கான முன்பதிவும் தொடங்கி படு ஜோராக நடைபெற்று வரும் இந்த வேளையில், அப்படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் புரமோட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தன்னைப்பற்றி தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு தரமான பதிலடி கொடுத்த சமந்தா

34

அந்த வகையில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சியில் லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, இயக்குனர் மணிரத்னம் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படத்தை தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் செய்யும் தில் ராஜுவும் இதில் கலந்துகொண்டார். அப்போது பொன்னியின் செல்வன் படம் உருவாக ராஜமவுலி தான் காரணம் என கூறினார்.

44

இதுகுறித்து அவர் பேசியதாவது : “இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் பாகுபலியை மட்டும் எடுக்காமல் இருந்திருந்தால், பொன்னியின் செல்வனும் உருவாகி இருக்காது. அவருக்கு பெரிய நன்றி. அவரை சந்தித்தும் இதை நான் கூறினேன். அவர் தான் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக எடுக்க வழிகாட்டி உள்ளார். ஒட்டுமொத்த திரையுலகிற்கு வரலாற்று படம் எடுக்கும் ஆர்வம் பாகுபலிக்கு பின் தான் வந்துள்ளது. பல வரலாற்று கதைகளை சொல்ல அவர் தான் கதவை திறந்து வைத்துள்ளார்” என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... ஏலியனுடன் தீபாவளி கொண்டாட ரெடியா.. பட்டாசாய் பட்டையகிளப்ப வருகிறது சிவகார்த்திகேயனின் அயலான் - ரிலீஸ் தேதி இதோ

click me!

Recommended Stories